"இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?
கேள்வி: கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா? ( என்று முஸ்லீம்கள் கேள்வி கேட்பது உண்டு ) ( கிறிஸ்தவர்களுடைய ) பதில்: என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன். "நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லை. ஒரு எடுத்துக்காட்டிற்காக, உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா? அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா? மேலே சொன்னது போல, ஒரு நபர் உரிமை கொண்டாடி சொல்லும் போது, ஒரு சராசரி மனிதன் அதுவும் "ஒர் இறைக்கொள்கையுடைய மனிதன்" இப்படிப்பட்ட உரிமைக் கொண்டாடும் நபர் மீது "தேவ தூஷணம் அல...