முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன?
முதல் பாகம் . முழுக்கு ஞானஸ்நானத்தில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? எடுப்பது அவசியமா? என்பதைப் பற்றியெல்லாம் எழுத அமர்ந்தபோது கர்த்தருடைய ஆவியானவர் ஒரு வசனத்தை நினைவுபடுத்துகிறார்:- உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.(மத்5:37) நண்பர்களே…! "உள்ளதை உள்ளதென்று சொல்லுவோம்" உதாரணமாக:- நான் ஊழியம் செய்கிறப்பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு, தன்னைப் பாஸ்டர் என்று அழைத்துக் கொண்ட செல்வந்தரான கத்தோலிக்கர் ஒருவர் எனக்கு எதிராக எழும்பியதுடன், நேரடியாக என்னிடம் சவால்விட்டு மிரட்டினார். அத்துடன் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை செய்ய விடாமல் என்னை மிகவும், எதிர்த்து வந்தார். கர்த்தரோ.., எனக்கு பக்கபலமாக இருந்தபடியினாலே, ஊழியத்தில் ஆரோக்கியமான வளர்ச்சியை கட்டளையிட்டார். சில மாதங்களுக்குப்பின், அந்த சகோதரருடைய மனைவி எதிர்பாராத வகையில் மிகவும் சுகவீனமானார்கள். (எனக்கு எதிராய் செயல்பட்டதினால்தான் என நான் சொல்வதாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.) மருத்துவரால் கைவிடப்பட்டபோது...