அறியாமை என்று சொல்வதா?
என் அன்புக்குரிய கிறிஸ்தவ சொந்தங்களே...! இணைய உலகில் கிறிஸ்தவர்கள்மீதும், கிறிஸ்துவின்மீதும், குறிப்பாக பரிசுத்த வேதாகமத்தின் மீதும் பல்வேறு விதமான தாக்குதல்களை பல்வேறு மதத்தினர் தொடுத்து வருகின்றனர். அவர்களில், மிகவும் கவனிக்கப்படத்தக்கவர்கள் முசுலீம்கள். இவர்கள் பெரும்பாலும் பைபிளை அசிங்கமாக சித்தரிக்கிறார்கள். உண்மை தெரிந்த அநேகராகிய நாம், வாய்மூடி மவுனமாக இருந்துவிடுவது சரியில்லை என்று சொல்லுகிறேன். எவராவது செய்யட்டும் நமக்கென்ன? என்ற மனநிலை நமக்கு வேண்டாமென அறிகிறேன். கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால் நமது எதிர்கால சந்ததி உண்மை தெரியாமல் குழப்பப்படும்போது நாம் அவர்களுக்கு துரோகம் செய்தவர்களாவோமே...!? தயவுசெய்து இதை படியுங்கள். ஒருவேளை இதைவிட உங்களுக்கு அதிக உண்மை தெரியமானால்..., முடிந்தமட்டும் அறிவியுங்கள். முடிந்தால்.., இதை அறிமுகப்படுத்துங்கள். இயேசுகிறிஸ்து ராஜாதி ராஜாவாக கர்த்தாதி கர்த்தராக நியாயாதிபதியாக வரப்போகிறார். ஆயத்தமாவோம் பிறரை ஆயத்தப்படுத்துவோம். “லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” ...