"காபா கருப்புக் கல் பற்றிய புதிய தகவல்"
முசுலீம்களின் பிரதான வணக்கத்தலமான காபா-வில் ஒரு கருப்புக்கல் இருக்கிறது. புனித பயணம் என்று சொல்லப்படுகிற ஹஜ் பயணம் செல்லும் முசுலீம்கள் அந்த க் கல்லைமுத்தமிடுவார்கள். மட்டுமல்ல..., உலகம் முழுவதுமுள்ள முசுலீம்கள் அந்த க் கல் இருக்கும் அந்த பள்ளிவாசலை நோக்கியே தொழுவார்கள். அந்த கல் குறித்து முகநூலில்(Face - Book) நடந்த சுவராஸ்யமான விவாதம். Fathima Esther கருப்பு கல் பற்றிய புதிய தகவல் முகமது நபி சிறுவனாயிருக்கும் போது இவரின் பாட்டனார் இந்த மக்கா கோயிலை கட்டினாராம் . முகமதுவும் கற்களையெல்லாம் கொண்டுவந்து உதவினாராம் . கட்டி முடித்தவுடன் இந்த கருப்பு கல் சிலையை சுமந்து வந்து அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைப்பது யார் எனும் சர்ச்சை பிரதான 4 கோத்திரத்தாருக்கிடையில் ஏற்பட்டதாம் . இந்த பிரச்சினையை தீர்க்க முகமது ஒரு ஆலோசனை சொன்னாராம் அதாவது ஒரு துணியை விரித்து கருப்பு கல் சிலையை அதில் வைத்து 4 கோத்திரத்தாரும் சீலையின் 4 தொங்கல்களை சுமந்து வரச்சொன்னாராம் . அவர்களும் அப்படியே செய்தார்களாம் . கடைசியில் முகமது தனத...