"நவீன தீவிரவாதிகள்"

 கிறிஸ்துவில் எனக்கு மிகவும் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு இயேசுகிறிஸ்துவின் இனிய பெயரால் அன்புடன் வாழ்த்துகிறேன்.  நான் உங்களுடன், சற்றுத் தணித்துப்பேச விரும்புகிறேன். நான் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தையும், குறித்த நபர்களையும் கர்த்தர் அடையாளம் காட்டியதற்காக, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கீழே வரிசைபடுத்தப்பட்டுள்ளவர்களைப் போன்றவர்கள் இத்தனை காலங்களாக அராஜகமான முறையில் ஆவிக்குரிய சபைகளுக்குள்  கொட்டிய குப்பைகளை, சுத்தம் பண்ண முயற்சிக்கிறேன்..., கிறிஸ்துவின் உபதேச சத்தியத்தின் நிமித்தம் விருப்பமுள்ளவர்கள் மட்டும் எனக்கு உதவி செய்யுங்கள். பணம் கொடுத்து அல்ல..., கமெண்ட் எழுதி. ஒருவேளை நம்மையும் இந்த நயவஞ்சகர்கள் இம்மானுவேல் பாஸ்டரை எழுத்துச் சவுக்கால் விளாசியதைப்போல் விளாசுவார்களே? என்று பயப்படுகிறவர்கள் இதுவரை இருந்தது போலவே உங்கள் இஷ்டப்படி முடிவெடுங்கள். எப்படியாயினும் அல்லேலூயா. அல்லேலூயா என்றால் ஆண்டவரைப் போற்றுங்கள் தேவனுக்கே மகிமை எனப் பொருள்படும். எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அது அதற்குரிய பலனை கர்த்தர் எனக்கும், உங்களுக்கும் கொடுப்பாராக.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.


சகோ விஜயகுமார்,
சகோ ஆண்ட்ரூ சுந்தரேஷன்,
சகோ பொன்னுதுரை ஜோசப்,
என்பவர்கள் தலைவர்கள் போலவும்,
சகோ ஜாய்ஷில் ஜோசப்,
சகோ ஆல்பிரட் ஜெயராஜ்,
சகோ பால் ஞானையா........,

இன்னும் இவர்களுடன் அநேகர், முந்தினவர்களுடைய அடிவருடிகளாக இருந்து புகழ்பாடுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து… கர்த்தருடைய ஊழியத்தை உண்மையாய் செய்கிறவர்களை முதலாமவர்கள் கீழ்த்தரமாக விர்சிப்பதும் அதற்கு அடுத்த வரிசையில் இருக்கும் மற்றவர்கள் ஆமாஞ்சாமி போடுகிற முட்டாள்களாகவும் காணப்படுகிறார்கள். இவர்களை சரியாக அடையாளப்படுத்த வேண்டுமானால்..., ஆவிக்குரிய கிறிஸ்துவ உலகம் எதிர் கொண்டிருக்கும், நவீன தீவிரவாதிகள். இவர்கள் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பயண்படுத்தாமல் கணிணி(கம்ப்யூட்டர்)களையும் இணையதள (இன்டர்நெட்) வசதிகளையும் வைத்துக் கொண்டு ஆவிக்குரிய சபைகளுடைய பக்கவாசல் வழியாக துணிகரமாக நுழைந்து, ஆத்துமாக்களில் பலவீனமானவர்களுடன் தந்திரமாக உறவாடி கொலை செய்துபோடும் எய்ட்ஸ் நோயாளிகள். இவர்களை  இப்படிச் சொல்வதற்கு நான் சற்றும் தயங்கவேண்டியதில்லை. காரணம், இவர்களுடன் பழகிய குறுகிய நாட்களிலேயே கண்டுகொண்டேன். நல்லவேளை உறவாடவில்லை. இவர்களில், சகோ. பால் ஞானையா போன்றவர்கள் தெரியாமல் தலையிட்டு விட்டோம் ( //கொஞ்சம் கவனிக்கணும். எனக்கு சகோ.இம்மானுவேல் ஆபிரகாம் அவர்களும் தெரியாது. சகோ. பொன்னுத்துரை ஜோசப் அவர்களும் தெரியாது. எனக்கு Face Book அக்கவுண்ட் உண்டு. அதில் என்னுடைய நண்பர் ஒருவர் சகோ. பொன்னுத்துரை ஜோசப் அவர்களின் video message ஒன்று share பண்ணியிருந்தார். அதற்குப்பின் நான் face Book - ல்அவருடைய நண்பர் ஆனேன்// -சகோ. பால் ஞானையா) (https://www.facebook.com/?sk=inbox&action=read&tid=id.137600049660472 ) என நொந்து போய் இருப்பதும், இவர்களை விட்டு விலகிவிட்டதுமா போன்ற ஒரு சூழ்நிலையையும் கண்கூடாக காண்கிறேன். அதற்காக. சகோ.பால் ஞானையா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருக்காக...,  கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.
   எல்லாவற்றையும் மிக கவனமாக எச்சரிக்கையாக பார்க்கும் நானே இவர்களுடைய வர்த்தைகளில் நன்மை உண்டோ? என நினைத்தேனே..! அப்படியானால், புதியவர்களும், சாதாரண விசுவாசிகளும், இவர்களது (ஆட்டு) தோலை பார்த்து ஏமாறமாட்டார்கள் என்று, எப்படி நம்புவேன்?  இந்த முட்டாள்கள் என்னைப்பற்றி ஒன்றுமே தெரியாமலேயே என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது போல..., (https://www.facebook.com/note.php?note_id=142726955810969) இவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை நான் விமர்சிக்கப்போவதில்லை. காரணம்,
நீதி 6:16 -ல், .ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 17.அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, 18.துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், 19.அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.என்ற வசனத்திற்கு நான் பயப்படுகிறேன். எனவே, இவர்களுடைய சரீரப்பிரகாரமான உறவுகளை அதாவது இவர்களுடைய மனைவிகள் மற்றும் பிள்ளைகள் என்னுடைய எழுத்துக்களில் குறுக்கிடாதிருக்கும் வரை அவர்களை நான் விமர்சிக்கவும், விவாதிக்கவும் போவதில்லை. ஆதாரமில்லாத எந்த ஒன்றையும் நான் எழுதப்போவதுமில்லை. மேலே நான் வரிசைப்படுத்தினவர்களுடைய எழுத்துக்களில் உள்ள துனிகரமான குற்றச்சாட்டுகளை அவர்கள் எழுப்பிய சந்தேகற்கிடமானவைகளைப் பற்றி பேசப்போகிறேன்.
  //போலி பாஸ்டர் இம்மானுவேல்...  தொடர்ந்து நாயைப்போல குறைத்துக்கொண்டிருப்பீரானால் அது உம்மை சுற்றிதான் கேட்கும் அதற்கு யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். பைத்தியம் டிராபிக் போலீஸ்மாதிரி நின்று போக்குவரத்தை கன்ட்ரோல் பண்ணமுடியாது என்பதை நினைவு கூறவேண்டும்.// என்று சகோ.பொன்னுதுரை அவர்கள் சொல்லி விட்டதால் இந்த இந்த நாயினுடைய எல்லைக்குள், அந்த கனவான்கள் ( எசேக் 28:12..15 ) வரமாட்டார்கள். பரவாயில்லை, என்னைச்சுற்றி இருப்பவர்களை மட்டும் எச்சரித்து தப்புவிக்கிறேன். முடிந்தால் சகோ.பொன்னுதுரை&co இதற்கு பதில் எழுதட்டும். வசனத்தின் தெளிவை காண்பதை விட்டு,விட்டு..., காணிக்கை, விபச்சாரம், வேசித்தனம், ஜோடிகள் என்று, இல்லாத ஒன்றைச் சொல்லக்கூடாது.

நல்லமரம் நல்லகனிகளையும், கெட்டமரம் கெட்ட கனிகளையும் கொடுக்கும் போன்ற வசனங்களின் அடிப்படையிலும் இவர்களை, விமர்சிக்க முடியாது. காரணம், இவர்கள் கர்த்தருடைய தோட்டத்தில் நாட்டப்பட்டவர்களுமல்ல, தோட்டக்காரராகிய இயேசுகிறிஸ்துவால் பராமரிக்கப்பட்ட-படுகிற மரங்களுமல்ல.. தேவனால் உண்டாக்கப்பட்டவைகளில் ஒன்றாக இவர்கள் இருந்தபோதிலும், காலம் நேரம் குறிப்பிடப்படாத நாட்களில் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, அவனது தந்திரமான குணத்தைக் கொண்டிருந்து, முதல் பெண்ணாகிய ஏவாளிடத்திலே துணிகரமாக பேசி, அவளைக்கொண்டு முதல் ஆண்மகனான ஆதாமையும், கெடுத்துப் போட்ட சர்ப்பத்தைப் போன்றவர்கள். எனவே, இவர்களிடத்திலே கனிகளை தேடவும், அதுகுறித்து ஆய்வு  செய்ய வேண்டிய அவசியமும் நமக்கு நிச்சயமாக இல்லை.

இவர்களுடைய நம்பிக்கைகளை வரிசைப்படுத்துகிறேன்.
1. பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம்.
ஞானஸ்நானத்தைக் குறித்து இவர்களது நம்பிக்கை என்ன? என்று பார்ப்பீர்களானால், கிறிஸ்தவத்தின் அடிப்படையும் கிறிஸ்தவர்களாக மாற விரும்புகிற எவரும் கீழ்ப்படிந்து கைக்கொள்ள வேண்டியதுமான உபதேசத்தை அப் 2:37 முதல் 42 வரிசையிலான வசனங்களில் காணலாம். அப் 2: 37. இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். 38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.39. வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி, 40.இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். 41,அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 42,அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். என்ற இந்த செய்தியை வரிசைப்படுத்துகையில், அவரவர் தங்கள், தங்கள் திறமையின்படி எத்தனை வகையாகவும் பிரித்து வரிசைப்படுத்திக் கொள்ளட்டும். நாம் இதை 7 வகைகளாக பிரித்துக் கொள்வோம். அதில் முதலாவது 1. நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், என்று பரிசுத்தஆவியின் நிறைவைப் பெற்ற, பேதுரு அழைக்கிறார். இவர், இயேசு கிறஸ்துவின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து, உலகப்பிரகாரமான வேலை, வருமானம், தாய், தகப்பன், சொந்த பந்தம், நண்பர், உற்றார், உறவினர், என எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை மடடுமே விசுவாசத்தோடு பின்தொடர்ந்து வைராக்கியமாக வாழ்ந்து, சூழ்நிலையால் மறுதலித்து பின், உணர்ந்து, மனம்கசந்து அழுது மன்னிப்பு பெற்று, கர்த்தரும் இரட்சகருமான தேவகுமாரன் இயேசுகிறிஸ்துவால், கர்த்தருடைய வேலைக்காக உறுதி பண்ணப்பட்டு, சீஷர்களோடு கூட மேலறையிலே காத்திருந்து, பிதாவினுடைய வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியைப் பெற்று பற்பல பாஷைகளைப் பேசி, எதுவும் அறியாத அரைகுறைகளால் குடித்துவிட்டுப் பேசுகிறார்கள் என்று, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவனாகிய பேதுரு, இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளையே பரிசுத்த ஆவியானவருடைய நிறைவோடு எழுந்து நின்று, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், என்றுப்பேசினார். முன்னதாக இயேசுகிறிஸ்துவும் மாற்16:16-ல் விசுவாசமுள்ளவனாகி, ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். என்று அறிவித்திருந்தார். பின்னதாக அப்போஸ்தலனாகிய பவுலும் ரோம 10: 10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும் என்று, அறிவிக்கிறார். இப்படியாக, வேதாகாம உபதேச அடிப்படையில் ஞானஸ்நானத்தைக் குழந்தைகள் எடுக்க முடியாது. காரணம், இருதயத்திலே விசுவாசமுள்ளவனாகி பாவத்தை உணர்ந்து, மனஸ்தாபப்பட்டு, பாவத்தை கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, தான் கர்த்தரை முழுமனதுடன் விசுவாசிப்பதையும், பாவங்களை மன்னிக்க சகல அதிகாரம் படைத்தவரிடத்தில் பாவங்களை அறிக்கையிட்டு கர்த்தரிடத்தில் மன்னிப்பு பெற்றதையும் பரிசுத்த மணவாட்டியாகிய சபைக்கு முன்பாக அறிவிக்கிறதும், கர்த்தரோடு உடண்படிக்கை செய்து பரிசுத்த மணவாட்டியாகிய சபையில் தன்னை இணைத்துக் கொள்வதுமே ஞானஸ்நானம். ஆனால், பொன்னுதுரை என்பவர் குழந்தை ஞானஸ்நானம் போதும் என்கிறார்.
  அப்படியானால்..., அவருடன் தொடர்பு வைத்திருக்கும் விசுவாசமுள்ளவர்களானபின் ஞானஸ்நானம் எடுத்தவர்களுடைய நிலைப்பாடு என்ன?  ஆமோதிக்கிறார்களா?

ஓவ்வொருவரும் உணர்ந்து ஞாணஸ்நானம் பெற வேண்டும்.  அப் 2:38.ம் வசனத்தில் மற்றொரு பகுதி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே என்ற வார்த்தை இதை சிலர் வேறுவிதமாய் புரிந்து கொண்டது போல நடிக்கிறார்கள். உண்மை அதுவல்ல, இதை பேதுருவின் வார்த்தையிலே சொல்லுவதென்றால்.. கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.2பேதுரு 3:16   என்பதுதான், உண்மை

உபதேசம் என்றால் எது? அது கிறிஸ்துவின் உபதேசமே...., 
2யோவா 9. கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்;. கிறிஸ்துவின் உபதேசம் ஞானஸ்நானத்தைக்குறித்து என்ன சொல்லுகிறது? மத் 28:19.20 சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக்  கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். அப்படியானால் ஞானஸ்நானம் கொடுப்பதும் எடுப்பதும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலேதான்...,

தேவ கட்டளையை மீறி இயேசுவின் நாமத்தினாலே மட்டுமே ஞானஸ்நானம் எடுக்கிற, கொடுக்கிற வேதபுரட்டரான முட்டாள்களுக்கு சொல்லுங்கள்: பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமங்களினாலே அல்ல நாமத்தினாலே புரியலயாயா? நாமத்தினாலே என்பது ஒருமையையும் நாமங்களினாலே என்பது பண்மையையும் குறிக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எனும் நாமத்தினாலே..., என்று சொன்னபடியினால் மூன்றும் வெவ்வேறு அல்ல மூன்றும் ஒன்றுதான். மூன்றையும் ஒரே பேறாக அதாவது, பிதா குமாரன் பரிசுத்தஆவியின் நாமத்தினாலே என்று அறிக்கையிட்டு ஞானஸ்நானம் கொடுக்கவும் எடுக்கவும் வேண்டும். இது தேவ கட்டளை இதை மீறுகிறவன் பிசாசினால் உண்டானவன்.

பேதுரு இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான். என்பதற்கான விளக்கம்: இதற்கு முன்புவரை யோவா 3:22 இயேசுவும் ஞானஸ்நானங்கொடுத்து வந்தார். 23.யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்து வந்தான். ஆக, அந்நாட்களில் இரண்டு ஞானஸ்நானம் இருந்தது உண்மையே..! ஆனால் இதை கிறிஸ்துவுக் கு முன், கிறிஸ்துவுக்குப்பின் என, உணரவேண்டும். இதற்கு முன்பு வரை, யோவன், மற்றும் இயேசு கிறிஸ்து ஆகிய இருவருமே, பிதாவாகிய தேவனுடைய பெயரால் ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர். இயேசுகிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த பின்பு, பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் கட்டளைக்கிணங்க, பேதுரு ஞானஸ்நானம் கொடுத்தார். எனவே, இங்கே பேதுரு கொடுத்த ஞானஸ்நானம் யோவானைப் பின்பற்றி அல்ல, இயேசுகிறிஸ்து கொடுத்த அதிகாரத்தின்படியே...., என அர்த்தபடுத்திக் கொள்ளவேண்டும். இதை தேவஞானமும் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்றவர்களும் புரிந்து கொள்வர்கள்.
 

 அடுத்து முன்னதாக நான் வரிசைப்படுத்தியவர்கள் கீழ்ப்படியாத இன்னொன்று முழுக்கு ஞானஸ்நானம் அது வேண்டியதில்லை என்கிறார் சகோ பொன்னுதுரை…
//தண்ணீர் என்பது ஒரு அடையாளம்தான் தெளிப்போ அல்லது முழ்கியோ ஞானஸ்நானம் எடுப்பதில் எந்த தவறுமில்லை // // (தெளிப்பு) குழந்தை ஞானஸ்நானமும் அர்த்தமுள்ளதுதான்// // என்னுடைய பிள்ளைகளுக்கு குழந்தை ஞானஸ்நானம்தான் (தெளிப்பு ஞனஸ்நானம்) கொடுத்திருக்கிறோம். பெற்றோர்களும் ஞானப்பெற்றோர்களும் அவர்களை திடப்படுத்தல் எடுத்து பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் பெற சிறுபிராயமுதல் கர்த்தருக்குள் நடத்தி வருகிறோம். திடப்படுத்தல் எடுத்து பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் பெற்ற பின் இன்னொருமுறை முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பது அவசியமில்லை என்றுதான் அவர்களுக்கு கற்றறுக்கொடுப்பேன்.//

என்று, பொன்னுதுரை மிகவும் திட்டமும் தெளிவுமாகப் பேசுகிறார். அவருடன் நட்பாக இருக்கிற, முழுகி ஞானஸ்நானம் எடுத்தவர்களுடைய மற்றும் இவருடைய கூட்டாளிகளுடைய நிலைப்பாடு என்ன? தொடர்ந்து பார்ப்போம் சற்று காத்திருங்கள். ப்ளீஸ்......,Wait and See....,

Comments

Popular posts from this blog

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?