ஏஞ்சல் என்பதற்கு தூதன் என்று அர்த்தம். தூதன் என்றால் செய்தி கொண்டு வருபவன்
காலக்கிரமங்களின்படி வேதாகமத்தை வாசிக்க வேண்டும் . - 2 --------- --------------------------------- --------------------------------------------------------- கடந்த பதிவின்போது பரிசுத்த வேதாகமத்திலுள்ள தேவசித்தத்தை நாம் சுலபமாக புரிந்துகொள்வதற்கு காலங்களை பகுத்து 4 முக்கிய காலங்களாக பிரித்து வேதாகமத்தை படிக்க வேண்டுமென்று எழுதியிருந்தேன். ஜனங்கள் வழி தப்பி போவதற்கு ஏதுவான ஏராளமான காரணங்களில் மிகவும் முக்கியமானது வேதத்தை காலக்கிரமங்களின்படி படிக்காததே ஆகும். இதனாலேயே கள்ள உபதேசங்கள் கணக்கில்லாத அளவில் பெருகி இருக்கிறது. இப்படிப்பட்ட புரட்டு உபதேசங்களிலிருந்து நாம் நம்மையும் நம்முடைய சந்ததியையும் தேவனுடைய கிருபையால் நம்முடன் இணைக்கப்பட்டிருக்கும் விசுவாசக் குடும்பங்களையும் தப்புவித்துக் கொள்ளவேண்டியது நமக்கு மிகவும் அவசியம். கர்த்தர் நம்மை உண்மையுள்ளவர்களென்று நம்புகிறார். முதல் காலம் :- மனசாட்சியின் காலம் முதல் காலத்தை ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்து தேவனால் வெளியேற்றப்பட்ட நாளில் துவங்கி கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய மோசே என்பவர் சீனாய் மலையில் கர்த்தரிடத்திலிருந்து நியாய...