முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன?

முதல் பாகம்.

முழுக்கு ஞானஸ்நானத்தில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? எடுப்பது அவசியமா? என்பதைப் பற்றியெல்லாம் எழுத அமர்ந்தபோது கர்த்தருடைய ஆவியானவர் ஒரு வசனத்தை நினைவுபடுத்துகிறார்:-   
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.(மத்5:37)  

நண்பர்களே…! "உள்ளதை உள்ளதென்று சொல்லுவோம்"  உதாரணமாக:-

நான் ஊழியம் செய்கிறப்பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு, தன்னைப் பாஸ்டர் என்று அழைத்துக் கொண்ட செல்வந்தரான கத்தோலிக்கர் ஒருவர் எனக்கு எதிராக எழும்பியதுடன், நேரடியாக என்னிடம் சவால்விட்டு மிரட்டினார். அத்துடன் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை செய்ய விடாமல் என்னை மிகவும், எதிர்த்து வந்தார். கர்த்தரோ.., எனக்கு பக்கபலமாக இருந்தபடியினாலே, ஊழியத்தில் ஆரோக்கியமான வளர்ச்சியை கட்டளையிட்டார். சில மாதங்களுக்குப்பின், 

அந்த சகோதரருடைய மனைவி எதிர்பாராத வகையில் மிகவும் சுகவீனமானார்கள். (எனக்கு எதிராய் செயல்பட்டதினால்தான் என நான் சொல்வதாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.) மருத்துவரால் கைவிடப்பட்டபோது, அவருடைய மனைவியும், அந்த சகோதரனும் போனில் என்னை அழைத்து ஜெபிக்க வரச்சொன்னார்கள். வீட்டுக்குச் சென்றேன், 

என்னை வரவேற்ற அந்த நண்பர் தமது உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் வெளியேறியபின்பு, தம்முடைய மனைவிக்காக ஜெபிக்கும்படிச் சொன்னார். நான் ஜெபிக்கத் துவங்கியவுடன், அவருடைய மனைவி மிகுந்த கண்ணீருடன் என் கரங்களைப் பற்றிக் கொண்டார்கள். மிகுந்த பாரத்துடனும், கண்ணீருடனும் ஜெபித்தேன். (எல்லாரும் வெளியேறிபின் ஜெபிக்கச் சொன்னதும் அந்த சகோதரி மிகுந்த கண்ணீர் வடித்தக் காரணமும் இதுநாள்வரை என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.) சுமார் 

ஒரு மாதத்திற்குப்பின் அந்த சகோதரருடைய மனைவி மரித்துப் போனார்கள். செய்தி வந்தது. சபையாராகப் போய் ஜெபித்துவிட்டு வந்தோம். அடக்க ஆராதனை கத்தோலிக்க முறைமைகளின்படி நடந்தது.

சில மாதங்களுக்குப்பின்  அவர் நமது சபையின் ஞாயிறு ஆராதனைக்கு வந்தார்.  ஆவிக்குரிய சபையே இல்லாத  இந்த ஊரில் தேவபெலத்துடன் நடைபெற்றுவரும் இவ்வூழியத்தில் ஒத்தாசையாக இருக்கப்போவதாக சபை மக்களுக்கு முன் சாட்சி சொன்னார். அவரது வீட்டுக்கு வரவேண்டுமென எனக்கு அழைப்பும் விடுத்தார். ஒருசில நாட்களுக்குப்பின் அவரை சந்திக்கும்படி அவரது வீட்டிற்குச் சென்றேன். அப்போது

அவர் இப்படிச்சொன்னார்: என்னை இந்த ஊரில் அவமானமாய்ப் பேசுகிறார்கள். நீங்களும் நானும் இணைந்து ஊழியம் செய்தால் எனக்கு ஏற்பட்டுள்ள கெட்டப்பெயர் நீங்கி விடும் என்றார். எதனால் கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது? எனக்கேட்டேன். அவருடைய வீட்டில் வீட்டு வேலைசெய்கிற இளம்பெண்ணை காண்பித்து சுமார் 1 வருடமாக இந்தப்பெண் எங்கள் வீட்டில் வேலை செய்கிறாள். என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? என் மனைவி சுகவீனாய் இருக்கும்போது அவளுக்கு இந்தப் பெண் மிகவும் ஒத்தாசையாக இருந்தாள். என் மனைவி சாகும்முன்பாக என்னை அழைத்து நீங்கள்தான் இவளை; பார்த்துக்கொள்ள வேண்டுமெனச் சொன்னாள். 

எங்களுக்கு குழந்தையே இல்லை. சுமார் 35 வருடங்களாக எந்த ஒரு குழந்தையையும் தத்து எடுத்த வளர்க்க நானும் எனது மனைவியும் விரும்பியதே இல்லை. ஆனால் என் மனைவியின் கடைசி ஆசையாக கருதி இந்தப்பெண்ணை என் மகளைப்போல வைத்திருக்கிறேன். நானும் இந்தப்பெண்ணும் மட்டுமே தனியாக இந்த வீட்டில் இருக்கிறோம். 

ஆனால்.., இந்த ஊரில் உள்ள சபிக்கப்பட்ட மக்கள் நான் இந்தப்பெண்ணை மனைவிக்கு பதிலாக வைத்திருப்பதாகப் பேசுகிறார்கள். என்று ஆத்திரமும் கோபமும் மிகுந்த வேதனையுமாகப் பேசினார்.

நான் சொன்னேன்: ஐயா உங்களது தனிப்பட்ட வாழ்வை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தெரியாத ஒன்றிலே துணிகரமாய் நுழைந்து உங்களை குற்றப்படுத்தக் கூடாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன்.

நீங்கள் ஊழியம் செய்ய வேண்டுமென விரும்புகிறபடியினாலே உங்களுக்கு ஒரு ஆலோசனை மட்டும்; சொல்கிறேன். 38 வயதே ஆன என்னைவிட ஓப்பனை(மேக்கப்)களால்  இளமையாகக் காணப்படுகிறீர்கள். ஆனாலும் உங்களுக்கு 53வயது ஆகிவிட்டது. இந்த சகோதரிக்கு சுமார் 23 வயதுக்குள்தான் இருக்கும். இந்த  சகோதரிக்கு இது திருமண வயதுதானே? இந்த சகோதரியை மகளைப்போல கருதுவதால் நல்ல வசதியான படித்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள். கஷ்டப்பட்ட அந்த சகோதரிக்கும் வசதியான வாழ்வும் கிடைக்கும். உங்களை ஒருவரும் குற்றப்படுத்தவும் முடியாது. இதே ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்தவும் ஏதுவாக இருக்கும் எனச்சொன்னேன். இது எந்தளவு சாத்தியப்படும் எனத் தெரியவில்லை என்றுச் சொன்னவர். யோசிக்கிறேன் என்றார். ஜெபித்தபின் வந்துவிட்டேன்.

இங்கே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: எமது ஊழியத்தின் துவக்கமுதலே வீடுகளில் காணிக்கை வாங்குகிற வழக்கம் இல்லை. சபை ஆராதனைக்கு வருபவர்கள் காணிக்கை எடுப்பதற்கான நேரத்தில் ஒரு பாடல் பாடப்படும் அப்போது காணிக்கைப் பெட்டி இருக்குமிடதிற்கு வந்து காணிக்கை செலுத்துவார்கள்.

நான் அவரிடம் பேசிவிட்டு வந்தபிறகு ஒருசில மாதங்களுக்குப்பின் ஒரு நாள் மாலை வேலையில் அந்த செல்வந்தரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. சபிக்கப்பட்ட இந்த ஊரை விட்டுப் போகப்போகிறேன். கர்த்தர் என்னிடம் சொல்லிவிட்டார். இன்னும் சில வருடங்களில் இந்த ஊர் இரண்டாகப்பிளக்கும் இந்த ஊரில் உள்ளவர்களெல்லாம் பூமிக்குள் சமாதி ஆகப் போகிறார்கள். எனவே நான் இந்த ஊரைவிட்டு இப்போதே போகிறேன். நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் நீங்களும் குடும்பத்துடன் உடனே இவ்வூரை விட்டு வெளியேறுங்கள் என்றார். 

நான் சொன்னேன்: மனிதனல்ல சர்வவல்ல தேவனாகிய கர்த்தர் என்னை இவ்வூருக்குப்போ என்றுச்சொன்னார். நான் புறப்பட்டு வந்தேன். ஒருவேளை இந்த மக்களோடு அழிவதற்காகவே கர்த்தர் என்னை அனுப்பியிருப்பாரானால் அது தேவசித்தம் நடக்கட்டும். உங்கள் தகவலுக்கு நன்றி எனச் சொன்னேன். இது நாள்வரைக்கும் நான் ஊழியம் செய்கிற இந்த ஊர் இரண்டாகப் பிளக்கவில்லை. அந்த சகோதரன் இப்போது தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் சகோ,ஆண்ட்ரூ சுந்தரேஷனுடன் இருப்பதாக அறிகிறேன்.

"உள்ளதை உள்ளதென்று சொல்ல வேண்டும்"

எனக்கு எது தெரியுமோ அதைத்தான் சொல்ல வேண்டும். இல்லாத ஒன்றை அல்லது எனக்குத் தெரியாத ஒன்றை துனிகரமாகச் சொல்லக்கூடாது. உதாரணமாக:- நவீன தீவிரவாதிகள் (திருநெல்வேலி ஆண்ட்ரூ சுந்தரேஷன், சிங்கப்பூர் விஜயகுமார், பெங்களுரூ பொன்னுத்துரைஜோசப் மற்றும், அவர்தம் நவீன சீஷர்கள் ) போல தெரியாதவைகளில் துணிகரமாய் நுழைய.... ,
நான் என்ன, மரமண்டையனா..!!..? சரி போகட்டும்…!

நாம் வசனத்திற்கு நடுங்குவோம் ஏனெனில் அப்படிப்பட்டவர்களையே கர்த்தர் நோக்கிப்பார்க்கிறாராம். (ஏசா66:2) சாரி ரொம்ப நேரமாயிட்டுல்லா..? ஞானஸ்நானத்தைப்பற்றி நாளை எழுதுகிறேன். ஒரு 12 மணி நேரத்திற்குள் மீன்டும் வருவேன். 
                                                 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Comments

Popular posts from this blog

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?