காவி உடைய கழற்றி வீசிவிட்டு உண்மையாக.....,
அன்பான சகோதர, சகோதரிகளே அன்றும் இன்றும் பெரும்பாலான சாதுக்கள் காவி உடை பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் ஊழியர்களில் கூட குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் , மறைந்த சாது சுந்தர்சிங் அவர்கள் தமிழகத்தில் சாது ஏசுதாசையா சாது தாசையா மற்றும் சாது செல்லப்பா போன்றோரையும் இன்னும் சிலரையும் காவி அணிந்த அல்லது அணிந்திருந்த சாதுக்கள் என்று சொல்லலாம். இவர்கள் கனத்துக்குரியவர்கள். இவர்களுடைய ஊழியம் சத்தியத்தின்படி மிக நேர்த்தியாக இருந்தது. என்பதை ஓரளவுக்கு அறிவேன். என்றாலும் ...., கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைக்கத் தகுதியற்றவர்களானாலும் துனிகரமாக தங்களைத் தாங்களே கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொள்ளுகிறவர்களில் சிலர் கூட காவி உடை அணிந்து வலம் வருகின்றனர். கிறிஸ்தவர்களோ இந்துக்களோ அல்லது பிற ஜனங்களோ காவி என்றாலே இந்துக்கள் எனச் சொல்லப் ப டுகிறவர்களில் இருந்தே துவங்குகிறது என்றாலும் காவி உடை பற்றி அறிய ஆவல் கொண்டேன். ஆர்வமுடன் படித்து அறிந்த சில தகவல்களை நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். இந்த நாட்களுக்கு நமக்கு அவசியமாக இருக்கிறது என்றே ...