ஒரு நாடோடிக் கதையைச் சொல்லுகிறேன்.
தேவனால் அன்பு கூறப்பட்டு, அவர் அனுப்பின தம்முடைய ஒரேபேரான குமாரனுடைய சிலுவைமரணம் மற்றும் உயிர்த்தெழுதலினால் மீட்கப்பட்டு, நம்முடைய பிதாவாகிய தேவனுடைய வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியின் வல்லமையால் நடத்தப்படுகிற எனது சகோதர சொந்தங்களுக்கு.. இயேசுகிறிஸ்துவின் வழியாக என் வாழ்த்துதல்கள் . நம்மிடத்திலே இருக்கிற நம்முடைய விசுவாசம் நம்மி ல் கிரியைச் செய்ய வேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது என்பதை இங்கே நான் நினைப்பூட்டுகிறேன். நாம் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். நாம் அவருக்கென்று ஏதாகிலும் செய்ய வேண்டும். என்ன செய்வது ? எங்கிருந்து துவங்குவது ? என்ற கேள்வி உங்களுக்குள் எழும்பலாம். வேத வசனத்தைப் படித்து பாருங்கள் பின்பு சுற்றிலும் திரும்பிப் பாருங்கள். இங்கே ஒரு செய்தியை உங்களுக்கு சொல்லுகிறேன். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் தொடக்ககால ஊழியர்கள், விசுவாசிகள் போன்ற எவரையும் காணவே முடியாது. காரணம், இன்று காணப்படுகிற ஊழியர்கள் அனைவருமே ஒருக் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு அதை தங்களுக்கென்று தக்கவைக்கவே பாடாய்படுகிறார்கள். பரிதாபமான காட்சி. ஒரு ஊழியக்க...