எனது உயிருக்கும் எனது உடமைகளுக்கும் உத்திரவாதம் என்பது நிச்சயமில்லை
பிரியமானவர்களே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மீதும் கிறிஸ்துவின் மணவாட்டி என்று பரிசுத்த ஆவியானவரால் வடிவமைக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறதான கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஒழுங்குகளின் மீதும் கவனமுள்ளவனாக இருப்பதினாலேதான் கிறிஸதுவின் உபதேசத்துடன் இசைந்து போவதாகச் சொல்லுகிற சகலரையும் சற்று உரிமையுடன் கடிந்துகொண்டு கவனமாக கன்டனம்பண்ணி எச்சரிப்புடன் புத்திச்சொல்லி வருகிறேன். (தீத் 1: 7..9) சபைக்கு எதிராக எழுதுவேரை கடிந்து கொள்கிறேன். சில நேரங்களில் கன்டனமும் செய்கிறேன். அதேவேளையில் சத்தியத்தை கர்தருடைய புதிய உடண்படிக்கையை பரிசுத்த வேதாகமத்தை தவறாக சித்தரித்து பலவீனமானவர்களிடத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறவர்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நேரடியாகவும் தொடர்பு சாதணங்கள் மூலமாகவும் தொடர்புகொண்டு முடிந்தமட்டும் மறுப்பை தெரிவிப்பதுடன். சத்தியத்தை விளக்கி வருகிறேன். .(தீத் 1:11) உதாரணமாக... முசுலீம்கள் மற்றும் சில தவறான உபதேசத்தை பின்பற்றி சோரம் போகிறவர்களிடமும் சத்தியத்தை சாட்சியாக அறிவித்து வருகிறேன். என்னுடன் ஆவியில் இசைந்து போகிறவர்களுடன் இணைந்து இணைய - தளத்திலும...