Posts

Showing posts with the label கிறிஸ்தவ ஊழியங்கள் சிங்கம் பணம் நிலைப்பாடு மோகன் சி லாசரஸ்

நம்முடைய பின் சந்ததியை ஏமாற்றுகிறோமா..?

கிறிஸ்தவ ஊழியங்கள் என்ற பெயரில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் தங்களுடைய மூளையிலிருந்து பிறந்தவற்றை உபதேசங்களாக மாற்றி பணம் பிடுங்குகிற வேலையை துரிதமாக அல்ல... துனிகரமாகவே செய்து வருகின்றனர். இதை கேட்பதற்கு தேவனைத்தவிர யாருமில்லை என்பது இந்த துனிகரக்காரர்களுடைய நிலைப்பாடு. சத்தியத்தை போதிக்கும் ஊழியர்களும் சந்தடிகளுக்கு விலகி சாமான்யர்களாக வாழ ஆரம்பித்துவிட்டார்கள். சத்தியத்திற்கு விரோதமானவற்றை சத்தம்போட்டு எதிர்க்கிற ஊழியர்களுடைய சபையிலேயே எதிர்ப்புக் குரல்களை எழுப்புமளவிற்கு இந்த துனிகரக்காரர்களுடைய போதனை அபாரமாகத்தான் இருக்கிறது. எனவே எல்லாருமே இவர்களுக்கு எதிரான கருத்துக்களை மற்றும் கன்டனக் குரல்களை அடக்கி வாசிக்க வேண்டியது அவசியமாகி விட்டது. உதாரணமாக.. பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமான உபதேசங்களை துனிகரமாகப் பேசும் சாது செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் மற்றும், மோகன் சி லாசரஸ் போன்றவர்களுடைய தவறுகளை அல்லது தவறான அனுகுமுறை மற்றும் அறிவிப்புகளை முகநூலி(Face Book)ல் நாம் சுட்டிக் காட்டுவதால் நண்பர்களில் அநேகருக்கு வருத்தம். முகநூலி(Face-Book) லு ம் தொலைபேசியிலும் என்னிடம் ...