எனக்கு உரிமையில்லையா?

//சகோ. இம்மானுவேல் ஆபிரகாம் பதிலுக்கு நன்றி//

என்று ஆரம்பித்த பால் நானையா.., 
//கொஞ்சம் கவனிக்கணும். எனக்கு சகோ.இம்மானுவேல் ஆபிரகாம் அவர்களும் தெரியாது. சகோ. பொன்னுத்துரை ஜோசப் அவர்களும் தெரியாது. எனக்கு Face Book அக்கவுண்ட் உண்டு. அதில் என்னுடைய நண்பர் ஒருவர் சகோ. பொன்னுத்துரை ஜோசப் அவர்களின் video message ஒன்று share பண்ணியிருந்தார். அதற்குப்பின் நான் face Book - ல்அவருடைய நண்பர் ஆனேன். இதனால் நான். சகோ. பொன்னுத்துரை ஜோசப் அவர்கள் share பண்ணும் Photo மற்றும் அதற்கு மற்றவர்கள் எழுதும் comments-களை நானும் பார்க்கலாம்// 
என்று தனது முன்னுரையை ஆரம்பிக்கிறார். அப்படியா..? பேஸ்புக்ல அப்படிதான் நண்பர் ஆவாங்களா? அது சரி.. நமக்கும் இந்த உண்மை இப்பதான தெரியுது. என்று நாமும், நமது மறுமொழியைத் துவக்குகிறோம்.

//அந்தப்படி சகோ. பொன்னுத்துரை ஜோசப் அவர்கள் ஒரு குருவானவர் ஒரு சகோதரிக்கு ஞானஸ்நானம் கொடுக்கிற ஒரு போட்டோ upload பண்ணியிருந்தார். அதற்கு பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாமாகிய நீங்கள் எழுதிய முதல் commend இன்னும் கல்யாணம் ஆகலன்னா...! கிறிஸ்தவ பையன கல்யாணம் பண்ண வேண்டியதாக இருக்கும்...!’ அதற்கு ஞானஸ்நானம் எடுக்கிறார் என்று எழுதினீர்// 
அப்படியல்ல, பிரதர் பால் நானையா 
1.இன்னும் கல்யாணம் ஆகலன்னா...! கிறிஸ்தவ பையன கல்யாணம் பண்ண வேண்டியதாக இருக்கும்...! (ஒருவேளை ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தால்) 2. அந்தப்பொண்ணு முழுக்கு ஞானஸ்நானம்தான் வேணும்னு அடம்பிடிச்சுருக்குமா இருக்கும். 3. சகோதரர் பொன்னு போன்ற ஆட்கள் எங்க சபையிலும் இப்படிப்பட்ட அதிசயம் நடக்குன்னு ஆவிக்குரிய சபைகளுக்கு அலவம் காட்ரதுக்கு செட்-அப் பண்ணியிருப்பாங்களா இருக்கும்...! அப்படிதான அண்ணன்? என்று எழுதியிருந்தேன்.

//அந்த சகோதரியின் அருகில் அவர் கணவரும் இருக்கிறார். ஒரு பாஸ்டர்-ஆக நீர் கேட்ட கேள்வி அநாகரிகமாகத் தெரிந்தது.//
எது அநாகரீகம்? குழந்தை ஞாணஸ்நானம் எடுத்தால் போதும் என்று எழுதுகிற பொன்னுதுரை இந்த படத்தை வெளியிடுவது உமக்கு அநாகரீகமாக தெரியலயோ? பொன்னதுரையின் அறிக்கையை பாருங்கள் 
//என்னுடைய பிள்ளைகளுக்கு குழந்தை ஞானஸ்நானம்தான் (தெளிப்பு ஞனஸ்நானம்) கொடுத்திருக்கிறோம். பெற்றோர்களும் ஞானப்பெற்றோர்களும் அவர்களை திடப்படுத்தல் எடுத்து பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் பெற சிறுபிராயமுதல் கர்த்தருக்குள் நடத்தி வருகிறோம். திடப்படுத்தல் எடுத்து பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் பெற்ற பின் இன்னொருமுறை முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பது அவசியமில்லை என்றுதான் அவர்களுக்கு கற்றறுக்கொடுப்பேன்.// 
என்று அறிக்கை வெளியிடுகிற பொன்னுதுரை ஜோசப்பும் தனக்கு விபரம் தெரியாத வயதில் தெளிப்பு ஞானஸ்நானம் மட்டுமே எடுத்ததாக நம்பிக் கொண்டு, மற்றவர்களுக்கும் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுத்து வருகிற எப்பொழுதாவது வசதி படைத்த பொன்னுதுரை போன்றவர்களுடைய கட்டாயத்தினால்...! (எங்கள் சபையில் தெளிப்பு ஞானஸ்நாம்தான் கொடுப்பார்கள்நான் அந்த பாஸ்டரை கேட்டுக்கொண்டபடி அந்த பாஸ்டரும் முழுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு சம்மதித்தார். http://truthrobust.blogspot.com/2011/07/v-behaviorurldefaultvmlo.html) முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிற சி.எஸ்.ஐ குருவானவரும் இணைந்து ஒரு பெண்ணை ஆற்றில் மூழ்கடித்தால்....!??? (முழுக்கு ஞானஸ்நானத்தை ஒரு சி.எஸ்.ஐ குரு கொடுத்தால் அதற்கு பெயர் மூழ்கடித்தல்தான்,) அதற்கு என்ன அர்த்தம்? பிரதர் பால் நானையா 

//சகோ. இம்மானுவேல் ஆபிரகாமாகிய நீரும் ஒரு பாஸ்டர்-ஆக இருக்கிறீர். உங்க சபையில் இப்படிப்பட்ட காரணங்களுக்காகத்தான் ஞானஸ்நானம் கொடுப்பீங்களோ என்று எனக்கு தெரியல....!!// 
  என்றிருக்கிறீர். வந்து பாருங்கன்னே வந்து பார்த்தாதானே தெரியும். உங்களுக்கு அந்த மேன்மை. அவசியம்னா? வந்து பாருங்க.
//பின்னர் மற்றுமொரு Photo- க்கு நீர் இப்படியாக commend எழுதியிருந்தீர். எப்படியென்றால் ‘சக்க்க்கோதரர் அவர்களே...! கருப்பு அங்கிக்கும் வெள்ளை அங்கிக்கும் என்ன வித்தியாசம்?’ ‘கிரஹம்னா என்ன? பிரவேஸம்னா என்ன?’ என்று ஒருவிதமாக கேளி கிண்டல் பண்ணுவது மாதிரியும் இருந்தது. //

பால் நானையா.., நான் ஒரு கண்ணாடி மாதிரி, நீ எதை காட்டுகிறாயோ அதுதானே உனக்குத் திருப்பிக் காட்டப்படும். நீ ஆவிக்குரிய சபைகள்னாவே அதனுடைய பாஸ்டர்கள் எல்லாம் திருடர்கள், கள்ளர்கள், கொள்ளைக்காரர்கள், விபச்சாரக்காரர்கள், அவன் மனைவிகளெல்லாம் வேசிகள், அவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் பல ஜோடிகளுடன் திரிகிறரர்கள் என்று எழுதினால்... நீ யாரை சொல்லுகிறாய்? என்று கேட்க, எனக்கு உரிமையில்லையா? பால் நானையா .சகோ. பொன்னுத்துரை ஜோசப்.., நீ ஆவிக்குரிய சபைகளைப்பற்றி உத்தேசமாய்தான் சொல்கிறாய் நான் உன்னைப் பற்றி ஆதாரமாய் சொல்லட்டுமா.? முடியும். திருநெல்வேலயில் ஒரு கூட்டம் போட்டுப் பேசுவோமா? நானும் அவைகளை கண்டிக்க ஆயத்தமாக இருக்கிறேன். வருகிறாயா? அல்லது நீயும், நானும், நீ குறை சொல்லுகிற அந்தந்த பாஸ்டர்கள் சபைக்கோ அல்லது, வீட்டுக்கோ போய் நேரில் எச்சரித்து, கண்டித்துத் திருத்துவோமா? யோவான்ஸ்நானகன் மாதிரி... என்று கேட்டேனே...? பதில் சொல்லச் சொல்லுங்கள் பிரதர் பால் நானையா...! 

//இதையெல்லாம் சொல்லிவிட்டு நீர் மென்மையாக எழுதுவதில் கவனமாக இருக்கிறேன் என்றும் உங்களைப் பற்றி சொன்னீர்//
யோவான்ஸ்நானகனும் இயேசுவும்கூட, எப்பொழுதும் மென்மையாகவே இருக்கவில்லை. நான், கிறிஸ்துவின் சிந்தை உள்ளவன்.

//இதையெல்லாம் வாசித்த பின்புதான். நான் உங்களிடம் ‘மென்மையாக எழுதுவதில் கவனமாக இருக்கிற சகோ.ஆபிரகாம் அவர்களே 'சக்க்க்கோதர்' என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துக்கொள்ளலாமா? 'சகோதரர்' என்று ஒரு வார்த்தை தமிழ் மொழியில் உண்டு. ஆனால் இது எங்கிருந்து வந்தது. நீங்கள் எழுதிய முதல் 'கமெண்ட்' யை கவனிக்கவும்’ என்று எழுதியிருந்தேன். அதற்கு ஒரு பாஸ்டர்-ஆக கர்த்தருடைய வசனத்தைப் போதிக்கிற நீர் எனக்கு கொடுத்த பதில் ஒரு list-கொடுத்து ‘அவர்கள் எல்லாம் இப்படி பேசுவதை நீ பார்க்கவில்லையோ பார்க்கவில்லையென்றால் நீயொரு குருடன் என்றும் பார்த்துவிட்டு நீ என்னை சொல்வாயென்றால் நீயொரு முட்டாள் என்றும் பதில் தருகிறீர்’//
இப்போதாவது உமக்குப் புரிந்தால் சரி. அப்படியானால், நீங்க இன்னும் நான் பட்டியலிட்ட அதையெல்லாம் பார்க்கவில்லையா? பார்த்தீரா? என்ற என் கேள்விக்கு இப்போதும் பதில் தரவில்லையே?
//சகோ. பொன்னுத்துரை அவர்களை என்னுடைய தலைவர் என்று என்னைப் பார்த்து நீர் சொல்கிறீர்//
எவன் ஒருவனுக்கு எந்த முகாந்தரமும் இல்லாமல், அவன் செய்வது சரியா தவறா எனத் தெரியாமல், "எப்பொருள் யார்? யார்? வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என உணர்வில்லாமல்..., 1தெச5:21.21."எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்". என்ற வசனத்தையும் மறந்து..., ஜால்ரா அடித்தீரானால், எனது பதில் இப்படித்தான் இருக்கும். ஒரு பாஸ்டர் எப்படியிருக்க வேனும் என்பதை உலக பார்வையில் வரையறுக்காமல் வேத வசன அடிப்படையில் முடிவெடுங்கள். தம்பியாகவே இருந்தாலும் என்  வாழ்த்துக்கள்.
//மீண்டும் உங்களுடைய பதிலுக்கு நன்றி உமக்கு ஒரு C.S.I குருவானவர் தேவ ஊழியத்தை செய்து ஒரு ஆத்துமாவைக் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கிறாரே..!!//
இதே நபர் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுத்தவர்களையெல்லாம் எந்த மந்தையில் சேர்க்கிறார்.  இரண்டு ஞானஸ்நானம் இருக்க முடியாதே? 
// என்ற வயித்தெரிச்சல்தான் இப்படியெல்லாம் சொல்ல வைக்குது// 
சரிங்க அண்ணா..
// மற்றவர்களோடு பேசும்போதும், எழுதும்போதும் எந்த வகையிலான அணுகு முறையைக் கையாள வேண்டும் என்று, தெரியாத நீரும் ஒரு Pastor…..!!!!!!!!!! // இத முதல்ல படிங்க பால் நானையா மத்23: 23...31.
//அதனால் இப்படிப்பட்ட மனோபாவனையை மாற்றி தேவனுக்கு ஒப்புக்கொடுத்து பரிசுத்த ஆவியானவராகிய தேவனுடைய வழிநடத்துதல் என்னிடம் காணப்படுகிறதா.. என்று உங்களையே ஆராய்ந்து பார்த்து பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு என்பது ஆவியின் கனி நிறைந்த வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையோடு இந்த ஊழியத்தை செய்யுங்கள். //
   அண்ணன் பால் நானையா நான் கற்றுக் கொள்ள உங்களிடம்தான் வரனும். கொஞ்சம் அடரஸ் ப்ளீஸ் என்று உங்களைவிட வயதில் மூத்தவனான நான் தாழ்மையோடு கேட்கிறேன்..

Comments

Popular posts from this blog

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?