பெந்தகோஸ்தே சபைகளை அவதூறு செய்கிற பொன்னுதுரை ஜோசப் அவா்களுக்கான சிறப்பு அழைப்பு..
இதெல்லாம் பிழைப்பா? அல்லது, இதுதான் பிழைப்பா? என்ற தலைப்பில்.., // பிழைப்புக்கு வழியில்லாமல் சபைகளை ஆரம்பித்து பாஸ்டர்களாகி திருட்டுத்தொழில் செய்து நடத்துகின்றவர்கள் செய்கின்ற அட்டூழியங்கள்தான் இவைகள். இவர்கள் கேயாரம் சபை என்றும் அகாபே சபையென்றும் தங்கள் கட்டிடங்களுக்கு பெயர்களை வைத்துக்கொண்டு பண்ணிக்கொண்டிருப்பதே அட்டூழியங்கள்தான். // என்ற –( Ponnudurai Joseph ) பொன்னுதுரை ஜோசப் அவா்களுக்கான சிறப்பு அழைப்பு :- P.J அவா்களே நான் ஊழியம் செய்யும் சபைக்கு எவ்விதத்திலும் தொடா்பற்ற நீா் முறையற்று நடந்து கொள்வதுடன், K.R.M சபையின் பெயரையும் மற்றும் சில சபைப் பெயா்களையும் அடையாளப்படுத்தி ஒரு (Status) பதிவிட்டு பெந்தகோஸ்தே சபைகளை அவதூறு செய்திருக்கிறீா். உமது பதிவில் உள்ளதையெல்லாம் படிக்கும்போது நீா் உண்மையிலேயே அக்கரையினால் எழுதுகிறீரா? அல்லது ஆவிக்குரிய சபைகளை குற்றப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், வேண்டுமென்றே எழுதுகிறீரா? என்ற சந்தேகம் என்னைப் போன்ற பாஸ்டா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றின எங்கள் சந்தேகத்தை அறிய உமக்கு 2 வாய்ப்பு தருகிறேன். ...