Posts

"அதுதான் முசுலீம்மதம்"

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்றும் அவரது வாழ்க்கை முறை அவரது சட்ட திட்டங்களின்படி பரிசுத்தமாகவே இருந்தது. அவரிடத்தில் பாவம் உண்டு என்று யாரும் சொல்ல முடியாத வகைகளில் வாழ்ந்து காட்டினார். அதுமட்டுமல்ல..., சுமார் 2800 ஆண்டுகளாக யூதர்களுக்கு யெகோவா என்ற பெயரில் இவர் அறிவித்திருந்த முன்னறிவிப்புகளின்படி எல்லாருடைய பாவங்களையும் மன்னிக்கும் பொருளாக தம்மைத்தாமே பாடுகளுக்கு உட்பட அனுமதித்தவர் அதை முழுமையாக அனுபவித்தார். அவர் யாரையும் பயமுறுத்தாமல் மரணத்தை சந்தித்தார். அதன்பின்..., முன்னர் அவர் மிகவும் திட்டமாய் சொல்லியிருந்தபடியே மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இதைக் கண்டவர்கள் பிரமித்தார்கள். இதைக் காணாத மற்றவர்கள் இதை ஏற்காமல் ஏற்றவர்களை பயமுறுத்தினார்கள். பார்த்தவர்கள் பார்த்தது உண்மையாயிருந்தபடியினாலே அதை மறுக்கவில்லை.., மறக்கவில்லை. ஆம் என்று ஆணித்தரமாக சொன்னார்கள். அதுவே அது அவர்களுக்கு ஆபத்தானது. கொடுமைகள் பல செய்தபோதும் அதை அவர்களால் மறுக்க முடியவில்லை. உண்மையை உரைக்காமல் அவர்களால் இருக்கவும் முடியவில்லை. இந்த உண்மையாய் நடந்த நிகழ்வுக்காக உயிர் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தனர்....

20. 01. 13 K.R.M Sunday Service.

நேற்று இருந்ததைவிட ஒரு மேலான வாழ்க்கையை தேவ உதவியுடன் வாழ இன்றே தீர்மாணியுங்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது 20.01.2013 அன்று நம்முடைய K.R.M சபை ஆராதனையில் பகிர்ந்து கொண்ட தேவ செய்தி.. https://www.youtube.com/watch?v=9eJzSDbVyTc

கடைசிவரை நம்முடன்....,

Image
அவர்: கர்த்தர்.  கர்த்தர். இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும்,  மகா தயையும் சத்தியமுமுள்ள தேவன். யாத் 34: 6 ...நீரே தேவன். உம்முடைய வார்த்தைகள் சத்தியம் 2 சாமு 7: 28 என் நாவிலே அக்கிரமம் உண்டோ?  என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ? யோபு 6: 30 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,  தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே  மறுரூபமாகுங்கள். ரோம 12: 2 தேவனை அறிந்தவர்களும், கண்கள் திறக்கப்பட்டவர்களும், சத்தியத்தை உணர்ந்தவர்களும், யதார்த்தத்தைப் புரிந்தவர்களும், பகுத்திவுள்ளவர்களும் கர்த்தருக்காக கடைசிவரை நம்முடன் இணைந்து வருவார்கள்.

சென்னை "ஜெப மாநாடு" திடுக்கிடும் தகவல்கள்.?

Image
"ஜெபமாநாடு" என்ற பெயரில் சென்னையில் பிரமாண்டமான அளவில்.., "ஆன்மீக அரசியல் மாநாடு" ஒன்றை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இந்த மாநாட்டின் மூலம் லட்சக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கடவுள் பெயரால் ஏமாற்றப்பட்டுள்ளனர். எப்படியெனில்..., தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்ததுபோல சென்னையிலும் 12 மணிநேர உபவாசக் கூட்டமாகவே நடத்துவதுதான் இவர்களுடைய முதல் திட்டம். ஆனால், திடீரென்று 12 மணிநேர உபவாசக்கூட்டம் பிரமாண்டமான ஜெபமாநாடாக மாற்றப்பட்டதின் பின்னனியில்தான் பல்வேறு திடுக்கிடும் செய்திகள் இருக்கிறது என்பதே உண்மை. சென்னை 12 மணி நேர உபவாசக் கூட்டம், ஜார்ஜ் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியில்லாமலேயே  ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் என்று, அறிவித்துவிட்டார்களாம். இதை தாமதமாகவே அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் கடுமையாக ஆட்சோபித்ததாகவும் அதன் பின்னரே சின்னமலை ஏ.ஜி சபையின் மைதானத்திலென்று முடிவெடுத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. சென்னை 12 மணிநேர உபவாசக் கூட்டத்திற்காக ஏ.ஜி சபை மைதானத்தில் பல லட்சக்கணக்கில் செலவு செய்து அதாவது, மண் மட்டுமே சுமார் 5 அடி உயரத்திற்கு கொட்டி நிரப்...

"தோற்பதற்கு அல்ல ஜெயிப்பதற்கு"

Image
கிறிஸ்து இயேசுவினால் எனக்குப் பிரியமானவர்களே.. வாழ்த்துகிறேன்.  நாம் எல்லாரும் ஆதாமுடைய சந்ததியில் வந்தவர்களேயானாலும், நாம் எல்லாரும், ஆதாம் அல்ல. என்பது இந்த பிசாசுவுக்குத் தெரிவதில்லை. எனவேதான் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை இந்த ஏமாற்றுக்காரன் பல்வேறு வழிகளில் வஞ்சிக்கத் துடிக்கிறான். அவன் தேவனுடைய ஜனத்திற்கெதிராக தானாகவும் தமது சீஷர்கள் மூலமாகவும் பல்வேறு யுத்த தந்திரங்களைப் பயண்படுத்துகிறான். அவைகள் முக்கியமான மூன்று. அவையாவன.., 1.கண்களின் இச்சை,  2.மாம்சத்தின் இச்சை,  3.ஜீவனத்தின் பெருமை.    இந்த ஆயுதங்களை அவன் முதன்முதலில் ஆதாமிடமும், பின்னர், அநேகரிடமும், உச்சக்கட்டமாக நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவிடமும், பயண்படுத்திப் பார்த்தான். என்ற.., செய்திகளையெல்லாம் நாம் எப்போதும், நினைவில் நிறுத்திக்கொள்வது நல்லது. "இயேசுவானவர் தேவனுடைய வார்த்தை" என்பதை நாம் நன்கு அறிவோம். என்றாலும் அவர் சோதனைக்காரனால் சோதிக்கப்பட வேண்டிய நிலை வந்தபோது.. இயேசு கிறிஸ்துவினிடத்தில் சாத்தானானவன் தேவனுடைய வார்த்தைகளை பயண்படுத்தியே வஞ்சிக்கப் பார்த்தான் ந...

K.R.M சபையின் இந்த மாதத்தின் வாக்குத்தத்த வசனமும், செய்தியும்.

தேவனுடைய அன்பினால்   என் சகோதர சகோதரிகளே…! கிறி ; ஸ்துவினிமித்தம் உங்களை வாழ்த்துகிறேன் . கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . 2012 ஆம் ஆண்டு துவங்கின நாள் முதல் இந்த நாள்வரை 11 மாதங்களாக கர்த்தர் நம்மை காத்து நடத்தியிருக்கிறார் . 12- ம் மாதத்தின் முதல் நாளாகிய இந்த நாளிலே கர்த்தர் சமூகத்தில் ; கூடி வந்திருக்கிறோம் . நமது கூடுகைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் . நமது கூடுகை, அர்த்தமுள்ளதாக இருப்பதினால் மகிழ்ச்சியடைந்து நம்முடைய கர்த்தரை துதிக்கிறேன் . நமது கூடுகையானது உலகப் பிரகாரமான ஆசீர்வாதத்தை மட்டுமே குறியாக வைத்து அல்ல . இதுவரை நம்மை நடத்தி வந்த கிருபை மிகுந்த தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தி அவரை மகிமைப்படுத்தும்படி கூடி வந்திருக்கிறோம் . இப்படி, சபையாய் கூடி இதுவரை நம்மை நடத்தின தேவனைத் துதித்து புதிய மாதத்தை ஜெபத்துடன் கூட துவங்கியிருக்கிறோம் . பரிசுத்த வேதாகமத்தில் நம்மை தைரியப்படுத்தக் கூடிய வசனங்களில் முக்கியமானது பிலி 4- ம் அதிகார த் தின் 6; மற்றும் 7- ம் வசனங்கள் ஆகும் . “ நீங...