அல்லாஹ் யார்?
அல்லாஹ் (Allah) என்பது அரபிச்சொல் Al என்ற சுட்டுச் சொல்லுடன் Ilah என்ற பெயர்ச்சொல் சேர்ந்து வருவதால் அது அல்+இலாஹ் = அல்லாஹ் ஆகும். அரபி மொழியில் கடவுளைக் குறிக்கும் பொதுவான வார்த்தை அல்லாஹ், அவ்வளவே..! 2500-க்கும் அதிகமான முறை குர்-ஆனில் வருகிறது. இஸ்லாம் வருவதற்கு முன்பு, இஸ்லாம் வருவதற்கு முந்தைய அரேபியாவில், முஹம்மதுவின் காலத்திற்கு முன்பே அல்லாஹ் முக்கியமான கடவுள்களில் ஒருவராக அரேபியர்களுக்கு இருந்திருக்கிறார். அல்லாஹ் என்பது, பொதுவான ஒரு பெயராக இருந்தாலும், இருப்பதிலேயே சிறந்த “அழகிய திருநாமங்கள்” (பெயர்கள்) அல்லாஹ்வுக்கு இருப்பதாக குர்-ஆன் 7:180; 17:110; 20:8; 59:24 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். குர்-ஆன் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களின் அடிப்படையில், முஸ்லீம்கள் அல்லாஹ்வின் 99 பெயர்களை வரிசைப்படுத்தி, மனப்பாடம் செய்து, அவைகளை அடிக்கடி சிந்திக்கின்றனர். அல்லாஹ்வுக்கு 99 பெயர்களை வைத்து, முஸ்லீம்கள் தொழுகை செய்தாலும், இஸ்லாமிய நம்பிக்கையின் படி, அல்லாஹ்வுடன் எவரும் நேரடியாக உறவோ அல்லது தொடர்போ வைத்துக் கொள்ள ம...