களிமேடு கிராம மக்களுடைய ஆறுதலுக்காக ஜெபிப்போம்.

 தன் மக்களை இழந்து வருந்தும், களிமேடு கிராம மக்களுடைய ஆறுதலுக்காக ஜெபிப்போம்.


அப்பர் என்ற பாடகருக்கு எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு பகுதிதான் தஞ்சையிலிருந்து மேற்கே பூதலூர் செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட களிமேடு கிராமம். 


களிமேடு கிராமத்திலுள்ள குளத்தின் வடகரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. சித்திரை சதய நாளில் அப்பருக்கு குரு பூஜை விழா நடக்கிறது. குருபூஜை நாளன்று மலர்களைக் கொண்டு அலங்கரித்து, அப்பர் ஓவியம் தாங்கிய திருத்தேர் வீதி உலா வரும். சில ஆண்டுகளாக அப்பர் உருவச்சிலை வைக்கப்பட்டு ஊர்வலம் நடக்கிறது. நேற்று (26ம் தேதி ) நடந்த தேர்த்திருவிழாவில்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.


மின் விளக்குகளால் அலங்காரிக்கப்பட்ட சப்பரத்தை வீதி சுற்றி வந்துள்ளனா். அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பர அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்புக்குழாய் மேலே உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்டிருக்கிறது. இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் சப்பரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சப்பரத்தை சார்ந்திருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த விபத்து தொடர்பாக சட்டசபையில் விளக்கமளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, *"களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்த்திருவிழா அல்ல, அது சப்பரம். 

இந்த சப்பரத் திருவிழாவை ஊர்மக்களாகவே நடத்தியது"* எனத் தெரிவித்திருக்கிறார்.


இரக்கமுள்ள நம்முடைய தேவனாகிய கா்த்தர்தாமே இக்கிராமத்தினரை ஆறுதல்படுத்த வேண்டும். அறியாமையில் அகப்பட்டுள்ள இவா்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, இரட்சிப்பின் வழிகளை அறிந்து கொள்ளவேண்டும்.


கா்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Comments

Popular posts from this blog

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?