“மகிழ்ச்சியான எங்கள் நேரங்கள் தேவனுக்கு மகிமையாய் காணப்பட்டது”
நாங்கள் ஒன்றிணைந்தால் என்ன நடக்குமென்று இன்று (30 01 2014) மாலையில் தெரிவிப்பதாக இன்று காலையில் ஒரு பதிவை பதித்திருந்தேன். அதை Like - கியதுடன் பிண்ணூட்டங்களைப் பதிவிட்டு உற்சாகமூட்டிய அனைவருக்கும் என் முதல் வணக்கங்கள் உங்கள் நிமித்தமாக கா்த்தரை துதிக்கிறேன். நான் தாமதாகவே வீட்டிற்கு வந்ததால்.., பதில் எழுதவும் தாமதமாகிவிட்டது. பொறுமை காத்ததற்கு நன்றி. நாங்கள் நேற்றுதான் (29 01 2014) முதன்முதலாக நேரடியாக சந்தித்துக் கொண்டோம் முதல் நாளில் சுமார் 8 மணி நேரங்களுக்கு மேலாக ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தோம். எங்களுடன் மேலும் சில இணைய நண்பா்களும் கலந்துகொண்டனா். “மகிழ்ச்சியான எங்கள் நேரங்கள் தேவனுக்கு மகிமையாய் காணப்பட்டது” மீண்டும் இந்த நாளிலும் ஒன்று கூடினோம். அதைத்தான் முன்னதாகவே ”நாங்கள் ஒன்றிணைந்தால் என்ன நடக்குமென்று” இணையத்தில் பதித்திருந்தேன். நாங்கள் சந்தித்துக் கொண்டபோது இங்கு நடந்தவைகளை முகநூலில் வெளிப்படையாய் எழுத வேண்டாமென்று நண்பா்களாய் தீா்மாணித்தோம். என்றாலும் எங்களுடைய சந்திப்பை கொச்சைப்படுத்த முயற்சிக்கும் கள்ளஆவி பிடித்த சிலா்… ...