தாலி - கிறிஸ்தவா்
தாலி பற்றி ஆய்வு செய்யப் புற்ப்பட்டோமானால், அது நீண்டுகொண்டே போவதாக இருந்தாலும், அது அநேக கற்பனைக் கதைகளையே உருவாக்குகிறதேயன்றி வேறில்லை. இங்கே நாம் குறிப்பிட்டுள்ளவைகள் தமிழ் கலாச்சார நடைமுறைக்கும் முன்னோருடைய சிந்தை செயலுக்கும் பொருத்தமாக இருப்பதால் இதுவாகத்தான் இருக்குமென முடிவுக்கு வர நம்மால் முடிகிறது. இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன், இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்த நாளில் கல்யாணம் செய்து கொள்வதாக தாலம் பனை என்ற பனை ஓலையில் அனைவரும் கையொப்பமிட, அந்த ஓலையினை குடிமகன் ( ஒவ்வொரு ஊரிலும் குடிமகனே தலைமகன் என்று சொல்லுவார்கள்-இவா் சவரம் செய்கிற வேலையையும், திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளையும் செய்வார். அதே போல சலவைத் தொழிலாளி அவா் பல்வேறு பணிகளை செய்வதுடன் பெண்கள் பெரிய மனுஷி ஆன நிகழ்வில் இவா்களது பணி மிகப்பெரிய பங்களிப்பாகும். சவரத்தொழிலாளி என்ற குடிமகனும், வண்ணாா் என்ற சலவைத் தொழலாளியும் இல்லாத சடங்கு என்பது அக்கால கிராம வழக்கங்களில் நினைத்துக் கூட பார்க்க முடியாதவைகள் ) எடுத்துத்தர கயிற்றில் கட்டி மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக...