Posts

கிறிஸ்தவத்திற்கு என்னவாயிற்று?

Image
பெந்தகொஸ்தே சபைகளின் உண்மை நோக்கம்.  இரட்சிக்கப்பட்டு தேவ ஜனங்களாக ஆனவா்களை தேவனுக்கேற்ற பக்தி விருத்தி அடையச் செய்வதுடன்,  அவா்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் கறை திரை பிழையில்லாமல் வாழச்செய்ய வழி நடத்துவதும்,  வேத வசனமான மன்னாவை முறையாக புகுட்டி உட்கொள்ளச் செய்வதுடன் கிறிஸ்துவினுடைய நிறைவான வளா்ச்சிக்கு ஏற்றபடி பூரண புருஷராக வளரச் செய்வதுமாகும். இந்நிலையில், இயேசுகிறிஸ்துவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து அவருடைய வருகையில் அவரை மகிழ்ச்சியோடு எதிகொள்ளச் செய்வதுமே பெந்தகொஸ்தே சபைகளின் உண்மையான நோக்கம் என்பதை நம்மில் அநேகா் அறிவார்கள்.    அதேநேரம்..., இந்த உண்ணத நோக்கத்தைக் கெடுக்க வந்த சில பெருச்சாலிகள் போன்ற போதகா்கள், நாங்களும் பெந்தகொஸ்தே சபைப் போதகா்கள்தான் என்று பொய்யான பிரச்சாரம் செய்வதுடன்,  பெந்தகொஸ்தே அல்லது ஆவிக்குரிய உபதேசத்தை சிதைத்து, பெந்தகொஸ்தே என்னும் பெயரையே கெடுத்தும் வருகிறார்கள். இவா்கள் பணத்தாசை  பிடித்து திரிவதினாலேயே இப்படி நடந்து கொள்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடாகவே இந்த மொட்டை போட்ட மனிதரை வைத்து ...

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

Image
யோகா - நோய்களை குணப்படுத்துமா? யோகாவின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். -------------------------------------------------------------------------------- அற்புத ஆற்றலாமே? யோக(ம்) என்னும் சொல், பொருள் தெரிந்தோ தெரியாமலோ நாட்டில் பரவலாக, பேசப்பட்டு வருகிறது. ஊடகங்களிலும் முதன்மை இடத்தைப் பிடித்து வருகிறது. யோகா- என்றால் அது ஓர் அற்புத ஆற்றல் பெற்றது என்று அதன் ஆதரவாளர்களால் பரப்புரை செய்யப்பட்டும் பறைசாற்றப்பட்டும் வருகிறது. யோகா - என்பது ஒன்றும் வைதிக, ஆத்மீக, மதச் சடங்கல்ல அது ஒரு உடற் பயிற்சி..! கல்வி நிலையங்களில் கூட அது பயிற்றுவிக்கப்பட வேண்டும்; பயிற்று விக்கப்படும் என்று அறிவிப்பும் வந்துள்ளது. யோகா என்ற சொல்லில் - கருத்தில் ஏதோ ஒரு மயக்கம் நம்மில் பெரும்பாலானவர்க்கு வந்திருக்கிறது. அரசியல் தலைவர்கள்; பேராசிரியா்கள், அலுவலர்கள்; கல்வியாளர்கள்; விளையாட்டு வீரர்கள்; விளம்பர மாதிரிகள் (Models) திரையுலகை சோ்ந்தோர் யோகாவெனும் இம்மாயவிலையில் சிக்கி ஈடுபாடு காட்டி இறைந்து போகின்றனர். இதில் ஒரு வேடிக்கை - வியப்பு என்னவென்றால்.., யோகா நோயைக் குணமாக்கும் மருத்துவ முறை...

பரிதாபமாக பார்க்க வேண்டியிருக்கிறது.

Image
மதங்கள் குறிப்பாக இந்திய மதங்கள் காலத்திற்கேற்றபடி தங்கள் மத நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டே வருவதை விபரமறிந்தவா்கள் ஒத்துக் கொள்ளுகின்றனா். இவா்கள் முன்நாட்களில் தங்கள் மத நம்பிக்கையாக அறிவித்தவைகளையே பின் நாட்களில் மறுத்து விடுகிறதும், மறைக்கிறதுமான பல்வேறு சம்பவங்களை நாம் பல நேரங்களில் கண்டிருக்கிறோம். இந்த தைரியம் பெரும்பாலும் இந்து மதத்திற்கு மட்டுமே இருப்பதைக் கண்டு, ஆச்சா்யப்படும் அதேநேரம்,  அந்த மதத்தின் பாமர இந்துக்களைத்தான் நாம் பரிதாபமாக பார்க்க வேண்டியிருக்கிறது. வேதங்களை உடையதாக பெருமைப் பேசுகிற   பிராமணிய மதம்,  தற்போது  இந்து மதமாய் உலகிற்கு அடையாளப்படுத்திக் கொள்ளுவதற்கு முன், பல்வேறு மத நம்பிக்கைகள் என்னும் பிற நிறத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு இணைக்கப்பட்ட மதங்களுக்கு ஏற்ப தன் நிறத்தை பல்வேறு விதமாக மாற்றிக்கொண்டதை சரித்திர வாயிலாகவே நாம் அனைவரும் அறிய முடியும். முதலில் திராவிடமும் பின்னா் சமண பௌத்த வழிபாடுகளும், இதை ஒழிப்பதற்காகவே எழுந்த பக்தி இயக்கங்களான சைவம் வைணவம் போன்றவையும் மட்டுமல்ல பிராமணீய மதத்தவா்கள் சற்றுக்கூட ஏற்கவ...

தேவஜனங்கள் வேதவசனத்தைக் கேட்கனும், அதன்படி நடக்கனும் அதையே முதன்மைப்படுத்துவேன். - Pastor Immanuel Abraham.

Robin Shalal என்ற நண்பா் எனக்காக ஒரு கடிதம் எழுதி பதிவிட்ட பதிவின் மூலம் அவா் தனது அறியாமையை இங்கே வெளிப்படுத்தி இருக்கிறாரேயன்றி வேறொன்றும் அதில் தெரியவில்லை . என்றாலும் , எனக்கு கடிதம் எழுதிய அவருக்கு பொறுமையாக பதிலளிக்க வேண்டியது எனது கடமை . ஆதலால் , இதை பதிவு செய்கிறேன் .   நண்பா் கேட்ட கேள்விகளும் , அதற்கான எமது பதில்களும் ,   // 1. உங்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட ஊழியம் என்ன ? ஐயா .//   கா்த்தரால் மீட்டுக் கொள்ளப்பட்டவா்கள் அடங்கிய சபைக்கு என்னை கா்த்தர் ஊழியக்காரனாக ஏற்படுத்தி இருப்பதினாலே   கா்த்தருடைய சபையை அசுத்தமானவா்களிடமிருந்தும் கள்ளா்களிடமிருந்தும் தப்புவிக்கும் ஊழியத்தை நேரிலும் இணையத்திலும் தேவபெலத்தோடு செய்து வருகிறேன் .   // 2. கடந்த 20 ஆண்டு காலமாக ஊழியம் செய்து உள்ளீர் . ஆத்துமா ஆதாயம் எவ்வளவு ஐயா .//   தனி ஒரு நபா் யாருடைய துணையுமின்றி கா்த்தருக்காக ஆத்தும ஆதாயம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .   உதாரணமாக மோகன் சி லாசரஸ் ...