Posts

சிலர் வருத்தப்படக் கூடும்..!

Image
நான் கள்ளர்களைப் பற்றி அதிலும் Yauwana Janam என்ற Samuel Churchill பற்றி அதிகமாக எழுதுகிறேனாம்..! ஒருசிலர் வருத்தப்படக் கூடும். பரிசுத்த வேதாகாமத்திற்கு புறம்பாக செயல்பட்டால், யாராயிருந்தாலும்.., உதாரணமாக ஒபாமா முதல் ஓமக்குச்சி வரை நம்முடைய எச்சரிப்பு க்கு உள்ளாகிறார்கள். இன்பக்கதை., அடங்காத காமம்., படித்து ரசியுங்கள் என்கிறார் Yauwana Janam. என்னங்க இதெல்லாம்..?  என்கிறேன் அவ்வளவே ஆவிக்குரியவர்கள் இந்த நபரை விட்டு விலகுங்கள். என்கிறேன். இது தவறு என்றால் என்ன நியாயம்? முன்னதாக திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் பிடிக்க வேண்டியதாக இருக்கிறதே..!? ஏனெனில் நம்முடைய நேசரின் திராட்சத்தோட்டம் பூவும் பிஞ்சுவுமாயிருக்கிறது. இப்படியிருக்கையில் நேசரின் தோட்டத்தைக் கெடுத்துப் போடுகிற குழி நரிகளையும் சிறு நரிகளையும் பிடிக்காமல் விட்டுவிட முடியாதே..?

நாம் விலகிவிட வேண்டியது அவசியம்...,

Image
திரித்துவம் பெயரல்ல உபதேசம்.   *பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராக இருக்கிற நம்முடைய தேவன் பரிசுத்தர். *பரிசுத்தராம் பிதாவாகிய தேவனிடத்திலே நாம் சேரவேண்டுமானால் நாமும் பரிசுத்தராக வேண்டும்.. *தேவனுடைய ஒரேபேரான குமாரனாம் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் பரிசுத்தரிடத்தில் சேரும் சிலாக்கியத்தை பெற்றிருக்கிறோம். முன்னதாக. *பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவானவருடைய கட்டளையின்படியே அதாவது பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவருடைய நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றால் பரிசுத்த ஆவியானவரைப் பெறுகிறோம். ஆவியானவருடைய துணையோடு பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைவதும் ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக காத்திருப்பதுமே நமது முக்கியப்பணி. எனவேதான்.. பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்ற திரித்துவ தேவனில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. அல்லது தனித்து நின்று செயல்படுவதும் இல்லை என்பதை அறிந்து நாம் திரித்துவத்தை அறிக்கை செய்து உயர்த்துகிறோம். இதை மறுதலிக்கிறவர்கள் தேவனுடைய சித்தத்திற்கு எதிர்த்து நிற்கிற பிசாசினுடைய ஆவியுடையவர்களாக இருப்பதால் இப்படிப்பட்டவர்களிடத்திலிருந்து நாம் வி...

என்னுடைய மணவாளனுக்கு தேவை மணவாட்டிதான்.....

Image
என்னுடைய மணவாளனுக்கு தேவை மணவாட்டிதான் விபச்சாரி அல்ல.. வேதம் சொல்லுகிறது :- விபசாரரே, விபசாரிகளே, உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். யாக் 4: 4 உலகம் முழுவதுமுள்ள மக்களில் பெரும்பான்மையானோர் தங்களுக்கென்று ஒரு தலைவனைத் தெரிந்து கொள்வதுண்டு அவர்களால் தெரிந்து கொள்ளப்பட்ட மனிதன் எப்படிப்பட்டவன்? அவன் பேசுவது என்ன? அவன் செய்கிறது சரியானதுதானா? என்பதை பற்றியெல்லாம் அவனுடைய ஆதரவாளர்களுக்கு கவ லையே இல்லை. ஒருவேளை அவர்களுடைய தலைவன் சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடித்தாலும்.., "புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாயிற்றே.!?" அதை இப்படி ஸ்டைலாக செய்து காண்பித்து மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுகிறானே..!? என்கிறவர்கள் அந்த கிறுக்கு இரசிகனுக்கு எதிரியாகவே தெரிவான் என்பது உண்மையல்லாவா ? அதே மாதிரியான மனநிலை உள்ள கிறிஸ்தவர்கள் பெருகியிருப்பது கிறிஸ்துவ சமுதாயத்திற்கே அவமானம் அல்லவா? இங்கும் அதாவது கிறிஸ்தவர் நடுவிலும் ஏராளமான தலைவர்கள். அந்த...

Immnuel Abraham எனும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்

Image
இம்மானுவேல் ஆபிரகாம் என்னும் பெந்தேகோஸ்தே பாஸ்டர், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் எதிரிகளையும் நேசிக்கும் பண்பாளர். நேசமாக கரம் கொடுப்பவர்களை பாசமாக அணைக்கும் அன்பர். உண்மையாகவே கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிற தேவ ஊழியர். பெரிய ஊழியங்கள் என்ற பெயர் பிரபலத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட ஊழியங்களின் வேத விரோத கொள்கைகளை யும் பல ஊழியர்களின் ஏமாற்று செயல்களையெல்லாம் அனைவரும் அறியும்படி வெளிச்சம்போட்டு காட்டிய விதம் அருமை. இவர் ஊழியம் செய்யும் Kallikulam Revival Mission Church என்ற KRM சபை ( http://krmchuch.blogspot.in/p/k-r-m-church-service.html ) முன்னுதாரணமான கிறிஸ்தவ சபையாக செயல்படுவதை கண்களால் கண்டு ஆண்டவரை துதிக்கிறேன். எதையும் கொடுக்க வசதியற்ற ஏழை விசுவாசிகளை பெரும்பான்மையாகக் கொண்ட சபையில் வருமானத்தைப் பற்றிய கவலையின்றி உண்மையாக ஊழியம் செய்கிறவர் சத்தியத்திற்காக வைராக்கியமாக நிற்கிறார். சபை மக்கள் கொடுக்கும் காணிக்கை பணம் சபைக்கு வரும் ஏழைகள் வயதானவர்கள் மற்றும் பசித்தவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கே போதுமா ? என நான் யோசித்திருக்கிறேன். இருந்தாலும் அங்கு செல்...

அடுத்தப் பண்டிகை எப்போது வரும்…?

கிறிஸ்து இயேசுவில் எனக்குப் பிரியமானவர்களே..! உங்கள் நிமித்தமாக கர்த்தரைத் துதிக்கிறேன். கிறிஸ்தவ மார்க்கத்தினர் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளுகிறவர்கள். கர்த்தருடைய வருகையை நோக்கிக் காத்திருப்பதற்கு பதிலாக அடுத்து நமக்கு என்ன பண்டிகை வரும்? என்ற எதிர்பார்ப்புடன் வாழத் துவங்கிவிட்டார்களே?!! என வேதனை ஏற்படுகிறது. பண்டிகைகளுக்கு ஆதரவாக பலரும்.. அது நமக்கு அவசியமா? என்று கேள்வி எழுப்புகிற உண்மை கிறிஸ்தவர் சிலரும் இணையத்திலும் மற்றவிடங்களிலும் பண்டிகை காலங்களில் காரசாரமாய் விவாதிக்கின்றனர். இதன் முடிவில் பண்டிகை வேண்டுமென கூச்சலிடுகிற ஜனங்களுடைய குரல் ஓங்கி ஒலிப்பதும் இது அவசியமா? என்கின்ற ஜனம் அநேகரால் கேலியாய் பார்க்கப்படுவதும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் ஏற்பட்ட அவமானம்  என்பேன். இதையெல்லாம் பார்க்கும்போது.. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். என்ற வசனமே நமக்கு முன் நின்று நம்மை ஆறுதல் படுத்துகிறது. கிறிஸ்தவர்களுடைய ஆராதனை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பரிசுத்த வேதகாம உபதேசங்களின் அடிப்படையில்தானே தீர்மானிக்க ம...

நம்மில் யாரும், மறக்கவே மறக்கக் கூடாது.

Image
அன்புள்ளவரான ஆண்டவரிடம்... அரிவாளும் இருக்கிறது என்பதை நம்மில் யாரும் மறக்கக் கூடாது. நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனை திராட்சத்தோட்டக்காரருக்கு உதாரணமாக்குகிறார். தொடர்ந்த வசனங்களில் தன்னை திராட்சச்செடி என்றும் உருவகப்படுத்தி அறிவின்றார். (யோவா 15: 1..3) தன்னுடன் இணைந்திருக்கிறவர்கள் தோட்டக்காரராக சித்தரிக்கப்படும் தேவனுடைய சித்தத்தின்படி நடவாவிட்டால்... அவர்களை கிறிஸ்துவிடமிருந்து பிதாவாகிய தேவன் களைந்துபோடுகிறார். அதாவது.. அன்புள்ளவராக யோவா 3:16 ல் அறிவிக்கப்பட்ட ஆண்டவரிடம் அரிவாளும் இருக்கிறது என்பதைச் சொல்லி நம்மை தெளிவாக எச்சரிக்கிறார். நம்முடைய இரட்சகர். இப்படிக் களைந்து போடப்பட்டவர்கள் உலர்ந்து போவார்களாம். அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து அக்கினியிலே போடுகிறார்கள். அவைகள் எரிந்துபோம். யோவா 15: 6 நண்பர்களே.., நீங்களும் நானும் 2013 ன் இறுதி நாட்களில் இருக்கிறோம். இதுவரை எப்படியிருந்தோம்..? என்றல்ல.., இனிமேல் எப்படி இருக்கப்போகிறோம்..? என்று சிந்தியுங்கள். தீர்மானியுங்கள். புதிய தீர்மானங்களுடன் இந்தப் புதிய வருடத்தை சந்திக்க ஆயத்தப்படுங்கள். கர்த்தர் உங்...

அந்த நல்ல நாளுக்காக...,

Image
கிறிஸ்து இயேசுவில் என்க்கு பிரியமானவர்களே..!  மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில்  கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள். இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக் 2: 8..11 என்று சொன்ன அந்த நல்ல நாளுக்காகவும்.., இணைய பயணத்தில் என்னுடன் இணைந்து பயணிக்கிற நல்ல நண்பர்களுக்காகவும் கர்த்தரைத் துதிக்கிறேன்.  இந்த 2013 ன் 25ந்தேதியிலே, நீங்கள் எவ்வித மனநிலையில் இருந்தாலும், பரவாயில்லை. நானோ, இந்த வருடம் நேற்று ஆரம்பித்தது போல இருந்ததே, அதற்குள் அதாவது 2013 ம் வருடம் திடீரென்று கடந்து போய்விட்டதே  என்பதை  எண்ணி வியந்து போகிறேன்..  இந்த 25ந்தேதி முதல், கடந்த வந்த பாதைகளை திரும்பிப்பார்க்க முற்படு...