இனி எல்பிஜி தான் பயன்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா?
என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல், எனது தரப்பில் யாரும் வாதிடாமல், எனது எதிரிகள், இல்லை சில ஆர்வலர்கள் கொடுத்த குற்றங்களைப் பட்டியலிட்டு, அறிவியல் ஆதாரத்தைக் கூட கேட்காமல், நான் தண்டிக்கப்பட்டுள்ளேன். அதுவும் சாதாரணத் தண்டனையல்ல, மரண தண்டனை. எனது சந்ததிகளே இல்லாமல் போகும்படி எனது பரம்பரையை முற்றாக அழிக்கும் தண்டனை. இது வரலாற்றிலேயே முதன்முதலாக நடைபெறும் நிகழ்ச்சி என்று கூடக் கூறலாம். இதுவரை மனிதர்களை மட்டும் தண்டித்த நீதிமன்றம் முதல்முறையாக ஒரு மரத்திற்கு மரண தண்டனை விதித்துள்ளது. என்னைப் பற்றியும், எனது பயன்பாடு குறித்தும், எனக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றியும் வருங்காலத்தில் மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் எனது வாக்குமூலத்தை இங்கு கொடுத்துள்ளேன். acacia tree எனது பெயர் சீமைக்கருவேல் (வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட முள்செடி), ஆங்கிலத்தில் புரோசோபிஸ் ஜுலிப்ளோரா என்று அழைப்பார்கள். எனது சொந்த நாடு தென்னமெரிக்காவில் உள்ள பிரேஸில் என்றாலும், மனிதர்கள் உலகமயமாக்கல் கொள்கையை கொண்டுவருவதற்கு முன்பே நான் உலகமுழுவதும் எனது இருப்பை உணர்த்தி உள்ளேன். இந்தியாவில் 1...