
ஈஸ்டர் கிரேக்கா்களுடைய புராணக் கதையில், இஸ்தார் என்ற பெண் தெய்வம் தன் மகனையே மணந்து கொண்டதாக உள்ளது. இந்த அசுத்த தேவதைதான் கிரேக்க, பாபிலோனிய பாரம்பரியங்களில் கடவுளாகவும் இருந்துள்ளது. இந்த இஸ்தார் தனது செத்துப்போன கணவனை உயிர்த்தெழ வைப்பதற்காக 40 நாட்கள் உபவாசம் (விரதம்) இருந்து பின்னர் அவனை உயிருடன் மீட்டதாகவும் புராணம் கூறுகிறது. இந்த இஸ்தார் தேவதையின் 40 நாள் விரதத்தையே கத்தோலிக்கா்கள் கஸ்தி நாள் எனவும், C.S.I சபையினா் "லெந்து" நாட்கள் எனவும் கடைபிடிக்கின்றனா். இந்த அசுத்த தேவதையின் பெயரே "ஈஸ்டர்" எனவும் திருச்சபைக்குள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது. இந்த பிசாசின் வஞ்சகத்தை பைபிளுடன் கோர்த்து விடுவதற்கு ஏதுவாக, இஸ்ரவேலர் (யூதர்) இன்றும் கடைபிடிக்கும் பஸ்கா பண்டிகை காலக்கனக்கையொட்டி நடைமுறைப்படுத்தி கிறிஸ்தவ விசுவாசிகளை நம்ப வைத்தது ஆதிகாலத்தில் தோண்றிய RC திருச்சபை. முதல் நூற்றாண்டில் ஆதித் திருச்சபையை வழி நடத்திய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு போன்ற நிகழ்வுகளை விழாக்களாக அனுசரிக்கவில்லை, புதிய ...