உங்கள் வாழ்வின் சோர்வுகள் நீங்கும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வாழ்த்துகிறேன். இன்றைய மனிதர்களின் வாழ்க்கையை நாம் கவனித்தோமானால் பெரும்பாலானவா்கள் சோர்ந்துபோன நிலையைிலேயே வாழுகிறதை நாம் கவனிக்க முடியும். அவா்களுடன் ஒருமித்துப் போவதால் இரட்சிக்கப்பட்டதாக நம்புகிற தேவ ஜனங்களும்கூட உலக கவலைகளில் சிக்கி சோ்ர்ந்துபோன நிலையிலேயே, வாழ்ந்து வருகிறார்கள். இதையே முதலீடாகக்கொண்டு, பெரும்பாலான ஊழியங்களும், ஊழியா்களும் அழைப்பின் ஊழியங்கள், விடுதலையின் ஊழியங்கள், ஆறுதலின் ஊழியங்கள் போன்று, பற்பல பெயர்கொண்டு பிழப்பை நடத்துகின்றனர். அவனவன் திறமையின்படி அவனவன் செயல்படுகிறான். அப்படிப்பட்டவா்களை அண்டி அவர்கள் நிழலில் ஒரு கூட்டம் வயிற்றைக் கழுவுகிறதினால் ஊக்கம் எல்லாம் ஆக்கமாகிறது. அவா்கள் காட்டில் பணமழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நற்செய்திக் கூட்டங்கள் நாடக மேடையானதுடன், நடன மங்கையரால் அலங்கரிக்கப்படுகிறது. இயேசுவை அறிந்த மக்களோ தான் யாரென்றும் தன் நிலை என்னவென்றும் தெரியாமல், இயேசு, விசுவாசம், இரட்சிப்பு, ஆவிக்குரிய வாழ்க்கை என்பதெல்லாம் இதோ இங்கே.! அதோ அங்கே.! என்று வண்டிகட்டி பறந்து வருகின்றனர். பம்பரம...