ஏஞ்சல் டி.வியின் திரைகளையும் மேடைகளையும் கலர்கலராக அலங்கரித்துக் கொண்டிருக்கிற..,
எச்சரிக்கை “ஏஞ்சல் டிவி"
- யில் ஆபத்து….!
சாதுசெல்வராஜ் “ஏஞ்சல் டிவி" யின் உரிமையாளராவார். இவர் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இவருடைய (?) உபதேச பிரச்சார நிகழ்ச்சிகளில் இவருக்கு முன்பாக அல்லது இவருக்குப் பின் காணப்படும் திரையில் கழுகுச்சின்னம். இருக்கவேண்டுமென்பதை மிகவும் விரும்புகிறார்.
.jpg)
இவர் யாரையும் திருப்திப்படுத்தட்டும் நினைவு கூறட்டும் நமக்கு எந்த ஆட்சோபனையுமில்லை. அதேநேரம் சிங்கம் மற்றும் கழுகு படங்களுடன் காட்சியளிக்கும் சாது செல்வராஜ் கள்ள உபதேசங்களை கட்டவிழ்த்து விடுகிறாரே..! அதைத்தான் கன்டிக்கிறோம்.
தேவனாகிய கர்த்தர் அருவருக்கிறதும் கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முற்றிலும் எதிரானதுமான படங்களையும் ஏமாறுகிற மக்களிடம் பணம்
பிடுங்குவதற்காக இவர்களாகவே உருவாக்கிக் கொண்டுள்ள உபாய
தந்திரங்களையும் இவர்களுடன் அவ்வப்போது இடைபடும் ஆவி
அல்லது தூதர்களுடைய செய்திகளையும் கூடுவிட்டு கூடுபாயும் மந்திரவாதிகளின் சேட்டைகளையும் செத்துப்போன மனுஷ
ஆவிகளுடன் பேசி ஆலோசனைப் பெற்றுக் கொள்ளும்; சூனிய
வித்தைகளையும் அனுதினமும் விதவிதமான நிகழ்ச்சிகள் வழியே
கிறிஸ்தவ உபதேசங்களாக உலாவவிடுகிறார்களே..! அதைத்தான் எதிர்க்கிறோம்.
இந்தப்படங்களும் இவர்களுடைய உபதேசங்களும் நேர்த்தியான ஆவிக்குரிய கிறிஸ்தவர்களை அசைக்க முடியாது என்றாலும் பலஹீனமானவர்களை இவர்களுடைய வஞ்சக
வார்த்தைகள் கள்ள உபதேசங்கள் கவிழ்த்துப் போடும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. இதையெல்லாம் கவனித்து பார்க்கிற தெளிந்த புத்தியுள்ள ஆவிக்குரிய ஜனங்கள் இவர்களுடைய உபதேசங்களை பரிசுத்த வேதாகம வசனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் ஏஞ்சல் டி.வி வழியே
வெளிப்படும் வஞ்சகர்களால் சத்தித்தை சரியாய் அறிவிக்கும் உண்மையான ஊழியர்களுக்கு ஏற்படப்போகும் இடையூருகளை புரிந்து கொள்கிறார்கள். உதாரணமாக..
நமது
நண்பரின் உறவினர் ஒருவருக்;கு
மரித்துப் போன ஆவிகளுடன் பேசுகிற அனுபவம் இருப்பதாகவும் அப்படி பேசுவதன் மூலம்
அவர்கள் மூலமாக பற்பல
செய்திகளை கற்றுக் கொள்வதாகவும் சொல்லி வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல்.. அந்த
வல்லமையால் அவ்வப்போது குறி சொல்லியும் இருக்கிறார்.
நமது
நண்பர் அவருக்கு இயேசுகிறிஸ்துவின் அன்பையும் அவரால் வரும்
இரட்சிப்பையும் எடுத்துக்கூறி மரித்துப்போன ஆவிகளுடன் தொடர்பு கொள்வதாகக் கூறுவது தவறு.
நீங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடன் தொடர்பு கொள்வது மரித்துப் போன
மனிதர்களுடன் அல்ல பிசாசுகளுடன்தான் தொடர்பு கொள்ளுகிறீர்கள். அதுவும்..,
மரித்துப் போன
மனிதர்களைப் போன்று உங்களிடம் நடிக்கின்றது. இப்படி செய்வது தேவனுக்கு விரோதமான செயல்
கர்த்தர் இதை விரும்புவதில்லை என்பதையெல்லாம் வேதவசன அடிப்படையில் அவருக்கு சுட்டிக் காண்பித்து.., கற்பித்து கிறிஸ்துவுக்குள் நடத்தியிருக்கிறார்.
நண்பரின் உறவினரும் தனது
நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டு வேதம்
வாசிப்பதிலும் ஜெபம்செய்வதிலும் தன்னை
ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். நமது
நண்பருக்கு மிக்க மகிழ்ச்சி.
இப்படிப்பட்ட நாட்களில் ஒருநாள் நமது
நண்பரின் உறவினர்; ஏஞ்சல் டி.வி யை
பார்க்கிறார். அங்கே சாது
செத்துப்போன மனிதர்களுடைய ஆவிகளுடன் ஐக்கியப்பட்டிருப்பதையும் அவர்கள் பேசுவதையும் அவர்களுடன் இவர்
உரையாடுவதையும் குறித்து கதைகதையாகப் பேசுகிறார்.
இதைக்
கேட்டதுமுதல் நமது நண்பரின் உறவினர் மாபெரும் குழப்பத்திற்குள்ளாகிவிட்டார். அவரை
கிறிஸ்துவுக்கென்று
ஆதாயப்படுத்த பிரயாசப்பட்ட நண்பர் மீண்டும் தமது
உறவினர் பின்வாங்கி போய்விடாமல் கிறிஸ்துவுக்குள் நிலை
நிறுத்தப்பட மிகவும் பாடுபட்டு வருகிறார். ஆக..
ஏஞ்சல் டி.வி
ஊழியம். எவரையும் கிறிஸ்துவுக்குட்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல உள்ளே
இருப்பவர்களையும் பின் மாற்றத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே.. நன்றாக கவனியுங்கள். வேதாகமத்தில் காணப்படும் செய்திகளிலெல்லாம் பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து தேவனால் விடுவிக்கப்பட்ட ஜனங்கள் சத்தியத்தில் நடத்தப்பட்டு வருகிற நேரங்களில் கள்ள
உபதேசங்கள் ஜனங்களுக்கு இடையில் புகுந்து உறுதியுள்ள சிலரைத்தவிர அநேகர் வஞ்சித்தது. அவர்கள் தொடர்ந்து சத்தியத்திலே நடக்க
இயலாமல் இடறினார்கள். தேவனுடைய வழிகளைவிட்டு ஜனங்கள் வஞ்சிக்கப்பட்டு விலகிப்போன இடங்களிலெல்லாம் கவனித்தீர்களானால்..
ஏஞ்சல் டி.வி யில்
வருவது போன்ற ஒரு
மனிதனோ ஒரு மிருகமோ அல்லது பறவையோதான் காட்சிப்படுத்தப்பட்டது. எகிப்திலிருந்து விடுவிக்ப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களில் ஒருக்கூட்டம் கானனுக்குள் பிரவேசிக்காமல் அழிந்து போவதற்கும் மற்றொரு கூட்டம் வழி
தப்பி போவதற்கும் காரணமானது ஒரு
பொன்கன்றுக்குட்டி
என்பதை நாம் அறிவோம். பின்னாளில் பொன்கன்றுக்குட்டி அழிக்கப்பட்டது.
இங்கும் இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் பரம
கானானுக்குள் பிரவேசிக்கக் கூடாதபடி தடை
செய்யக்கூடிய அருவருப்புகள் ஏஞ்சல் டி.வியின் திரைகளையும் மேடைகளையும் கலர்கலராக அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த
கழுகுச்சின்னமானது
பிதாவாகிய தேவனையும் தேற்றரவாளனாம் பரிசுத்த ஆவியானவரையும் மறுதலித்து இயேசுவின் நாமம்
மட்டுமே என்று ஜனங்களை ஆபத்தான பாதையில் நடத்துகிற கூட்டத்தினருடைய சின்னமாகும்.
இந்த
இயேசுவின் நாமக்காரராகிய கூட்டத்தார் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களுடனும் சத்தியத்தை சரியாய் அறிவிக்கும் தேவ
ஊழியர்களுடனும் அனுதினமும் ஆங்காங்கே போராடுகிறான். இந்த
கள்ள உபதேசக் கூட்டத்தார் அநேக
விசுவாசிகளை தடம்புரளப்பண்ணி புரட்டு உபதேசமான இயேசுவின் நாமம்
மட்டுமே என்கிற உபதேசத்தையுடைய கூட்டத்தாருடன் இணைத்து பிதாவை பரிசுத்த ஆவியானவரை மறுதலிக்கப் பழக்க
முயற்சிக்கின்றனர்.
இந்த அமைப்பினருடைய அடையாளம் கழுகுச் சின்னமே..! என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த
கூட்டத்தாருக்கும்
சாதுவின் கூட்டத்தினருக்குமுள்ள பொருத்தம் என்னவெனில்..
இயேசுவின் நாமம்
மட்டுமே பிதாவும் பரிசுத்த ஆவி
என்ற வார்த்தைகளையே பயண்படுத்த வேண்டாமென்கிற குழுவினருடைய தலைவர் “ப்ரன்ஹாம்” என்பவர் தன்னை
ஏழாம் தூதன் என்றும் தூதர்களுடனும் தன்னுடைய தேவனுடனும் அடிக்கடி பேசுவதாகவும் சொல்லிக் கொண்டு வந்தார். இவர்
தனது உபதேசத்தைப் பின்பற்றும் சீடர்களடங்கிய கூட்டத்தினரை உலகம்
முழுவதும் ஏற்படுத்தி தன்
கிளைகளை பரப்பி இருக்கிறார். ப்ரன்ஹாம் பின்னாளில் கார்
விபத்தில் சாலையில் செத்தார். என்பது செய்தி என்றாலும் ப்ரன்ஹாம் ஊழியத்திற்கு கழுகுச் சின்னம்தான் அடையாளம்.
“ப்ரன்ஹாம்” சீடர்களடங்கிய கூட்டத்தினர் உலகரீதியில் செல்வசெழிப்பாக இருக்கிறார்கள். டி.வியை நடத்த
முடியாமல் மூடி மீண்டும் திறக்கப்பட்டதற்கிடையில் இவர்களுக்குள் ஏதாகிலும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாமோவென்று சந்தேகிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில்..
ப்ரன்ஹாம்”-க்கும் சாதுவுக்கும் உள்ள ஒற்றுமை “ஒற்றை கழுகுச்சின்னம்” மட்டுமல்ல.. அநேக உபதேச காரியங்களில் இவர்கள் ஓரணியில் காணப்படுகிறார்கள். எனவேதான் சொல்லுகிறேன்.
எச்சரிக்கை ஏஞ்சல் டிவி"
- யில் ஆபத்து.
Comments
Post a Comment